இன்றைய ரசிகர்களின் ரசனைக்கேற்ப உருவாகும் “நீ என்ன மாயம் செய்தாய்”!

நரேன் வழங்கும் என் பிக்சர்ன்ஸ் செல்பி கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக கவிதா நரேன் தயாரிக்கும் படம் “நீ என்ன மாயம் செய்தாய்”.
இந்த படத்தில் விவேக் சேகர் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். நேஹா சக்சேனா நாயகியாக நடிக்கிறார். இவர் அர்ஜுனுடன் ஒரு மெல்லிய கோடு படத்தில் நடித்திருக்கிறார். இன்னொரு நாயகியாக அர்ஷிதா சாய் நடிக்கிறார். மற்றும் மதுரை ஷர்மிளா, மோனிகா, ஷீபா, மாஸ்டர் தமிழ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ரதன் சந்தாவத், இசை – டேவிட் பரத்குமார், எடிட்டிங் – முகமது யாசின், பாடல்கள் – விந்தைபாரதி, சிவகங்கா, நடனம் – கௌசல்யா, தயாரிப்பு நிர்வாகம் – சிவகுமார், தயாரிப்பு – கவிதா நரேன்,
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எஸ்.ஆர்.பாலாஜி. இவர் பல படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர். அத்துடன் “இன்னுமா நம்மள நம்பறாங்க” எனும் படத்தையும் இயக்கி உள்ளார்.
படம் பற்றி இயக்குனர் எஸ்.ஆர்.பாலாஜியிடம் கூறும் போது, “வெளிநாட்டிலிருந்து தமிழகம் வரும் சித்தார்த் ( விவேக் சேகர் ) தனது சிறு வயது தோழியை காண ஆவலோடு தேடி செல்கிறான். அங்கே அவனது தோழி மேகா ( நேஹா சக்சேனா ) சொந்தம் சொத்துககள் என எல்லாவற்றையும் இழந்து நிற்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறான். அவளுக்கு ஆறுதல் சொல்லி, வேண்டிய உதவிகளை செய்கிறான். அந்த நட்பு காதலாக மாறுகிறது. அவர்கள் காதல் நிறைவேறியதா இல்லையா என்பதை இளமை ததும்ப உருவாக்கி உள்ளோம். இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களின் ரசனைக்கேற்ப படம் உருவாகி உள்ளது. படம் விரைவில் வெளியாக உள்ளது” என்றார்.