‘கனா’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு கெஸ்ட் ரோலா? – ரகசியத்தை வெளியிட்ட டைரக்டர்

Get real time updates directly on you device, subscribe now.

டிகராக குறுகிய காலத்தில் முன்னணிக்கு வந்த சிவகார்த்திகேயன் தற்போது ‘கனா’ படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் மூலம் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் இயக்குனராக அறிமுகமாகிறார்.

தயாரிப்பாளர் என்பதால் தான் ‘கனா’ படத்தின் பாடல்கள் மற்றும் படத்தின் விளம்பரங்களில் சிவகார்த்திகேயன் முகம் காட்டியிருந்தாரோ? என்று எல்லோரும் நினைத்திருக்க, படத்தில் ஒரு முக்கியமாக கேரக்டரில் அவரும் நடித்திருக்கிறார் என்கிற ரகசியத்தை உடைத்திருக்கிறார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ்.

”இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார் என்பது உண்மை தான். தான் ஒரு தயாரிப்பாளர் என்பதால் மட்டுமே நடிக்கவில்லை. கதையை நகர்த்திச் செல்லும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை இந்த கதை கொண்டிருந்தது. அதைப் பற்றி நாங்கள் விவாதிக்கும் போது கூட சிவாவுக்கு இது பற்றி எந்த யோசனையும் இல்லை.

Related Posts
1 of 29

உண்மையில், இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க, பல பிரபலமான நடிகர்களையும் கூட அவர் யோசித்தார். ஆனால் இறுதியாக அவர் தான் அந்த கதாபாத்திரத்துக்கு மிக பொருத்தமாக இருப்பார் என்பதை நான் அவரிடம் எடுத்து சொன்னேன். சிவகார்த்திகேயனை இந்த படத்தில் எல்லோருக்கும் பிடிக்கும் என நான் நம்புகிறேன்” என்றார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ்.

மேலும் “கனாவை பெண்களை மையப்படுத்திய ஒரு படம் என்று மட்டுமே சொல்ல முடியாது, அது அனைத்துக்குமானது. ‘கனவு’ மற்றும் ஆசைகள் அனைவருக்க பொதுவானது அல்லவா, அதுபோலவே இதுவும் உணர்வுகள் அடங்கிய குடும்பத்தோடு பார்க்க கூடிய ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும்” என்றார்.

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோருடன் தர்ஷன், இளவரசு, முனிஷ்காந்த் என்கிற ராமதாஸ், ரமா, சவரி முத்து, அந்தோணி பாக்யராஜ், பல புதிய நடிகர்கள் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கிரிக்கெட் வீரர்கள் பலரும் நடித்துள்ளனர். சுவாரஸ்யமான ஒரு விஷயம் என்னவென்றால், இந்த படத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களும் நடித்திருக்கிறார்கள்.