42 நாட்களில் ‘கன்னி மாடம்’ படப்பிடிப்பை முடித்த போஸ் வெங்கட்
“கன்னி மாடம்” படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ள நடிகர் போஸ் வெங்கட் தனது முயற்சியால் குறித்த நேரத்தில் படத்தை முடித்திருக்கிறார்.
ரூபி ஃபிலிம்ஸ் சார்பில் ஹஷீர் தயாரிக்க, ஸ்ரீராம் மற்றும் காயத்ரி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், வலீனா பிரின்ஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் சூப்பர் குட் சுப்ரமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
ஹாரிஸ் ஜே இனியன் ஒளிப்பதிவு செய்ய, இந்த படத்துக்கு ரிஷால் ஜெய்னி படத்தொகுப்பு செய்ய விவேகா பாடல்களை எழுத, தினேஷ் சுப்பராயன் சண்டைப்பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார்.
இது குறித்து இயக்குனர் போஸ் வெங்கட் கூறும்போது, “பிப்ரவரி 18ஆம் தேதி தொடங்கிய படத்தின் படப்பிடிப்பை, மே 16ஆம் தேதி வரை மொத்தம் 42 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்.
“கன்னி மாடம் படம் மெட்ராஸ் என்றால் என்ன என்பதை வரையறுக்கும்?. நகரின் மிகவும் புகழ்பெற்ற அடையாள இடங்களை படம் பிடித்து, அவை பற்றிய முழு விவரங்களையும் அளிக்க நினைத்தோம். சென்னைக்கு சாதிக்க நினைக்கும் கனவுகளோடு வரும் இளைஞர்களும், மற்றவர்களும் மேட்டுகுப்பம், விஜயராகவபுரம் மற்றும் சூளைமேடு போன்ற பகுதிகளில் தங்குவது ஒரு பொதுவான விஷயம். எனவே, ‘நேட்டிவிட்டி’ காரணிகளுக்காக இந்த இடங்களில் முழு படத்தையும் படம் பிடித்திருக்கிறோம்” என்றார்.
இசையமைப்பாளர் ஹரி சாய் இசையில் உருவான அனைத்து பாடல்களும் ‘மோண்டாஜ்’ முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது.
படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டிரைலர், ஆடியோ மற்றும் உலகளாவிய வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.