திகில் மர்மம் கலந்த த்ரில்லராக உருவாகும் ‘கருவு’!

Get real time updates directly on you device, subscribe now.

ஆல்ஃபா ஓசியன் எண்டர்பிரைஸ் (ALFA OCEAN ENTERPRISE ) நிறுவனத்தின் சார்பாக சுதீர் இப்ராஹிம் தயாரிக்கும் திரைப்படம் ‘கருவு’. இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதையை அறிமுக இயக்குநரான ஶ்ரீஷ்மா R மேனன் எழுதியுள்ளதோடு அவரே படத்தையும் இயக்குகிறார். முற்றிலும் புதுமுகங்கள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.கேரளத்தின் அடையாளங்களில் ஒன்றான மாந்திரீக மாயாஜால கலைகளின் இருள் அரசன் என அழைக்கப்படுபவன் தான் ஒடியன்..

தங்களுக்குப் பிடிக்காத எதிரிகளை பயமுறுத்துவதற்காக இரவு நேரத்தில் மிருகங்களைப் போல தங்களது தோற்றங்களை மாற்றிக்கொண்டு அச்சுறுத்தும் ஒடியனின் உண்மையான வாழ்க்கை சம்பவங்களை தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது