‘வாய்க்கொழுப்பு’ ஆர்.ஜே பாலாஜியை காலில் விழ வைத்த விக்ரமன்!
ஆடியோ பங்ஷன்களில் கலந்து கொள்ள வரும் சிறப்பு விருந்தினர்களை பாராட்டி மேடைக்கு அழைக்கிறேன் பேர்வழி அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்கள் சில நேரங்களில் எல்லை மீறிப்போவது வாடிக்கையாகி விட்டது.
அதிலும் சிலர் வாய்க்கொழுப்பெடுத்து யாரை? எப்படி? மேடைக்கு அழைக்க வேண்டும் என்கிற இங்கீதம் கூடத் தெரியாமல் அவர்கள் வயசுக்கும், அனுபவத்துக்கும் மரியாதை கொடுக்காமல் கலாய்த்து விட்டு பின்பு அந்த பெரிய மனிதரிடமே வாங்கிக் கட்டிக்கொள்வார்கள்.
அப்படித்தான் சில தினங்களுக்கு முன்பு நடந்த ‘இது என்ன மாயம்’ படத்தின் ஆடியோ பங்ஷனில் டைரக்டர் விக்ரமனிடம் செமத்தியாக வாங்கி கட்டிக்கொண்டார் பிக்.எப்.எம் ரேடியோவில் ‘ரேடியோ ஜாக்கி’யாக வேலை செய்யும் பாலாஜி.
அந்த விழாவில் கலந்து கொண்ட டைரக்டர் விக்ரமனை மேடைக்கு பேச அழைத்த பாலாஜி ” சார் நீங்க செண்டிமெண்ட்டா ஏதாவது பேசணும், உங்க பேச்சை கேட்கும் போதே நாங்கெல்லாம் கதறி கதறி பீல் பண்ணனும் ” என்று நக்கலடித்தபடியே பேச கூப்பிட்டார்.
பாலாஜியின் வாய்க்கொழுப்பைப் பற்றி ஏற்கனவே நன்கு அறிந்தவர் என்பதால் கடுப்பான விக்ரமன் மைக்கைப் பிடித்ததும் பாலாஜியை ஒரு பிடி பிடித்தார்.
“ தம்பி, என்னோட படங்கள்ல 90 சதவீதம் காமெடி இருந்துருக்கு. விக்ரமன்னாலே அழுது வடியிறவன்னு நெனைக்காதீங்க.. நான் காலேஜ்ல ஸ்டூடண்ட்டா இருந்தப்போ நெறைய பேரை கலாய்ச்சிருக்கேன். நான் இப்பவும் கலாய்ச்சேன்னு வெச்சுக்கங்க, நீங்கெல்லாம் தாங்க மாட்டீங்க சரிங்களா..? நான் என்னை ஒரு ஜென்டில்மேனா காட்டிக்கிறேன். ஆனா ரியலா நான் ஜென்டில்மேன் இல்லை. அதைப் புரிஞ்சிக்கங்க…” என்றார் டென்ஷனாக…
மென்மையான மனசுக்கு சொந்தக்காரரான விக்ரமனே இப்படி டென்ஷனாகி விட்டாரே என்று அதிர்ச்சியடைந்த பாலாஜி உடனே அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அவரும் பெருந்தன்மையோடு அவரது தோளை தட்டி விட்டுப் போனார்.
சில பேருக்கு மத்தவங்க கால்ல விழுந்தா தான் புத்தி வரும் போல…