மூன்று ஹீரோஸ் நடிக்கும் யூகி!

Get real time updates directly on you device, subscribe now.

கதிர், நரேன் மற்றும் நட்டி நடிக்கும்  ‘யூகி’ படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர், 2021 ஆகஸ்ட் 13 அன்று, தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டது.அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கும்  ‘யூகி’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. Forensic மற்றும்  Kala போன்ற வெற்றிப்படங்களை தந்த Juvis Productions நிறுவனம் UAN Film House மற்றும்  AAAR Productions நிறுவனங்களுடன் இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறது.

Related Posts
1 of 4

 ‘யூகி’ படத்தில்  கதிர், நரேன், நட்டி, பவித்ரா லட்சுமி, கயல் ஆனந்தி மற்றும் ஆத்மியா ராஜன் ஆகியோர் முதன்மை  பாத்திரங்களில்  நடிக்கிறார்கள். அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இப்படத்தினை இயக்குகிறார். தென்னிந்திய நடசத்திர நடிகர்களான, பிரதாப் போத்தன், ஜான் விஜய், முனீஷ் காந்த், சினில் சைனுதீன், வினோதினி, அஞ்சலி ராவ் மற்றும் பிந்து சஞ்சீவ் ஆகியோரும்  முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.