பிரகாஷ்ராஜூக்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி!

Get real time updates directly on you device, subscribe now.

சாயாஜி ஷிண்டே, மைம் கோபி மற்றும் பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் அகோரி.

ஆர்.பி.பாலா தயாரித்து, இயக்கியிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாக்யராஜ், நடிகை கஸ்தூரி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய நடிகை கஸ்தூரி தமிழர்களுக்கு எதிராகப் பேசிய பிரகாஷ்ராஜுக்கு பதிலடி கொடுத்தார்.

Related Posts
1 of 136

விழாவில் அவர் பேசியதாவது, “மே 23-க்கு பிறகு தமிழ்நாடு தான் கிங் மேக்கராக இருக்கப் போகிறது. அதைத் தெரிந்து கொண்டு தான் கன்னடர்கள் சின்ன சின்ன வி‌ஷயங்களுக்காக பேச ஆரம்பித்துள்ளனர். நாம் தலை நிமிர நிமிர மற்றவர்கள் பீதி அடையத் தான் செய்வார்கள். தமிழர்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். அதனால் தான் எங்கு போனாலும் அவர்களுக்கு மதிப்பு மரியாதை இருக்கிறது. தங்கள் திறமையால் தான் உலகில் எங்கு சென்றாலும் முன்னணியில் இருக்கிறார்கள். ஜெயிக்கிறார்கள்.

இந்தத் திரைப்படத்திலும் பல திறமைசாலிகள் இருக்கிறார்கள். படத்தின் டிரைலர் டீசர் எல்லாம் பார்த்து விட்டுப் பிடித்துப் போய் தான் இந்த விழாவிற்கு வந்தேன். இப்போதெல்லாம் பேய்ப் படம் ரசிக்கிற மாதிரி இருந்தால் மக்கள் ஆதரவு தருகிறார்கள். பேய்ப்படம் காமெடியாக இருப்பதைப்போல் வந்தால் மக்கள் மிகவும் ரசிக்கிறார்கள்.

”காஞ்சனா” படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த ”அகோரி”யும் அடுத்த ”காஞ்சனா”வாக இருக்கும் என்று நம்புகிறேன்.
கிராபிக்ஸ் காட்சிகளை பார்க்கும்போது பாகுபலிக்கு நிகரான காட்சிகளை உணர்ந்தேன்.ஏனென்றால் இந்த படத்தின் டிரைலர் டீசர் எல்லாம் பார்த்த நம்பிக்கையில் சொல்கிறேன். அகோரி பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.