காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்- விமர்சனம்

முத்தையாவின் மாவுப்பட்டறையில் இருந்து மேலும் ஒரு பொடி இட்லி இந்த காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்
ஹீரோ ஆர்யா ஜெயலில் இருக்கிறார்..ஏன்? வெளியில் வந்ததும் சித்தி இத்னானி பின் சுற்றுகிறார் ஏன்? சித்தி இத்னானியை யாராவது பெண் பார்க்க வந்தாலே மதுசூதனராவ் குடும்பம் பார்க்க வந்த மாப்பிள்ளையை வெட்டுகிறது ஏன்? பிரபுவிற்கு படத்தில் என்ன ரோல்? பிரபு எப்படி ஆர்யாவை வளர்க்கிறார்? இப்படி ஏகப்பட்ட கேள்விகளுக்கான பதில் தான் படத்தின் கதையும் திரைக்கதையும். படமெங்கும் கேள்விகளை எழுப்பி அதற்கு பதில்களைச் சொல்லி முடித்ததிலே முக்கால்வாசி படம் முடிந்து விடுகிறது..ஸ்ப்பா
ஆர்யா!
நல்லா இருந்த மனுசனை ராமநாதபுரம் பக்கம் கூட்டிட்டுப் போயி அண்டர்வேரோட அலைவிட்டிருக்கிறார் இயக்குநர். சுத்தமாக செட் ஆகாத வேடத்தில் ஆர்யா அரைகுறையாக பெர்பாமன்ஸ் செய்து அலற விடுகிறார். நாயகி சித்தி இத்னானி மட்டும் அழகாலும் நடிப்பாலும் அசரடிக்கிறார். பிரபு, ஆடுகளம் நரேன், பாக்கியராஜ், மதுசூதனராவ், தமிழ், உள்ளிட்ட இன்னும் டசன் கணக்கு நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலைக்கு மேல் நடித்துள்ளார்கள். ஸ்டண்ட் மாஸ்டர் டீம் பாவம். உயிரைக் கொடுத்து உதை வாங்கியிருக்கிறார்கள்
ஜிவி பிரகாஷ் இந்தப்படத்தை அசுரன் அளவிற்கு நினைத்து பேக்ரவுண்டில் சில்லறையைச் சிதற விட்டிருக்கிறார். But பெரிதாக வொர்க்கவுட் ஆகவில்லை. வேல்ராஜின் கேமரா நாம் பார்த்த ராமநாதபுரத்தை வெவ்வேறு கோணங்களில் காண்பித்து அசத்துகிறது
படத்தில் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்குற கதைகளில் எதை பாலோ செய்வது என்ற குழப்பம் வந்துவிடுகிறது. அவ்வளவு கதை சொல்கிறார் முத்தையா. மேலும் ராமநாதபுரத்தில் இவ்வளவு கொடூரமான வில்லன்கள்/வில்லிகள் இருப்பார்களா என்ன? பிரபுவிற்கும் ஆடுகளம் நரேனுக்குமான ஒரு பஞ்சாயத்து காட்சி மட்டுமே முத்திரை ரகம். மற்றபடி கட்டற்ற வன்முறை நம் பொறுமையைச் சோதிக்கிறது. இஸ்லாமியர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட சாதிக்கும் உள்ள உறவைச் சொல்ல நினைத்த முத்தையா அதை நல்லவிதமாகச் சொல்லியிருக்கலாம். இப்படி நமது நல்லி எலும்பை எல்லாம் உடைத்திருக்க வேண்டாம். திரையில் ஆர்யா எல்லோரையும் வெட்டிவிட்டு கேமராவை நோக்கி ஸ்லோமோசனில் நடந்து வரும் போது நமக்கு லூஸ்மோசனே வந்திடுது
பாட்ஷா இல்ல.. வெறும் கப்சா
2/5
#KatharbashaEndraMuthuramalingam #காதரபாட்ஷாஎன்றமுத்துராமலிங்கம்