கவலை வேண்டாம் – விமர்சனம்
RATING 2.5/5
தொடர் தோல்விகளுக்கு திரை போட வேண்டுமென்று ஹீரோ ஜீவா மட்டுமல்ல, தயாரிப்பாளரும் சேர்ந்து கவலைப்பட்டிருப்பார் போல. அந்த கவலைக்கு காசு பார்க்க இளவட்டங்களை மட்டுமே டார்க்கெட் செய்து செக்ஸ், காமெடி, வித் அருதப்பழசான லவ் எபிசோட் உடன் ரிலீசாகியிருக்கிற படம் தான் இந்த ”கவலை வேண்டாம்.”
குழந்தை பருவத்திலிருந்தே ஜீவாவும், காஜல் அகர்வாலும் நல்ல நண்பர்கள். வயசு ஏற ஏற அந்த நட்பு பெவிகால் ஆக ஒட்டி காதலாக மாறுகிறது.
அதுவரை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் தொடர்ந்த அவர்களின் நட்பு திருமணமாக கன்வெர்ட் ஆன ரெண்டாவது நாளே புட்டுக் கொள்கிறது.
பாபி சிம்ஹாவுடன் ரெண்டாவது திருமணத்துக்கு தயாராகும் காஜல் டைவர்ஸ் கேட்டு ஜீவாவிடம் வருகிறார். அவரோ சில கண்டிஷன்களைப் போட்டு அதை நிறைவேற்றினால் நான் டைவர்ஸ் தருகிறேன் என்கிறார்.
ஜீவா போடுகிற கண்டிஷன்களுக்கு காஜல் ஓ.கே சொன்னாரா? பாபி சிம்ஹாவை ரெண்டாவது திருமணம் செய்தாரா? என்பதே கிளைமாக்ஸ்.
“வாழ்க்கை வாழுறதுக்கு இல்லை, கொண்டாடுறதுக்கு… தினம் தினம் கொண்டாடு” என்று படத்தில் ஜீவாவுக்கு அட்வைஸ் செய்வார் மயில்சாமி. அவர் சொன்னபடியே படம் ஆரம்பித்ததிலிருந்து ஆர்.ஜே.பாலாஜி – பாலசரவணன் என தனது இரண்டு நண்பர்களுடன் பார்ட்டி, குடி, கும்மாளம் என கொண்டாட்டமாக வாழ்ந்திருக்கிறார் ஜீவா.
மூவர் கூட்டணியும் சேர்ந்து அடிக்கிற டைமிங் டயலாக்குகள் அத்தனையிலும் அநியாயத்துக்கு ‘ஏ’ நெடி. பல காட்சிகளில் ஆபாச கமெண்ட்டுகள் வலிய திணிக்கப்பட்டிருப்பது ”நியூ ஜென் காமெடி”யில் கொடுமையிலும் கொடுமை.
நக்கலும், நையாண்டியும் சேர்ந்த மாதிரியான கேரக்டர் என்றால் ஜீவாவுக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரி. அவருடைய அந்த இயல்புகள் இந்தப்படத்தில் முழுமையாக வெளிப்பட்டிருக்கிறது!
நாயகியாக வருகிறார் காஜல் அகர்வால். உருட்டை விழிகளில் மட்டும் தெரிகிற துறுதுறு அழகு முகத்தில் அப்பட்டமாகத் தெரிகிற ‘முத்தல்’ முகத்துக்கு முன்னால் எடுபடாமல் போய் விடுகிறது. காதல் காட்சிகளில் ஜீவாவுடன் ஏகத்துக்கும் நெருக்கம். ஆனால் காஜலின் ‘முத்தல்’ முகம் தான் ரசிகர்கள் ரசிக்க பெரும் தடை. இன்னும் ரெண்டு வருஷம் தான் தாக்குப்பிடிக்கும் போல. மேரேஜூக்கு மாப்பிள்ளை பார்க்கச் சொல்லிடுறது உத்தமம் மேடம்…
காஜலுக்கு தோழியாக வருகிறார் ஸ்ருதி ராமகிருஷ்ணன். முந்தைய படங்களை விட இதில் மாடர்ன் காஸ்ட்யூம்களில் வருகிறார். வருகிற காட்சிகளில் எல்லாம் இவரை வெச்சு செய்கிறார் ஆர்.ஜே பாலாஜி. சுடிதாரில் வரும் சுனேனா க்யூட் அழகு. அவருக்கான காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
பாபி சிம்ஹாவுக்கு ஹெஸ்ட் ரோல். இப்படிப்பட்ட வேஸ்ட் ரோலில் எல்லாம் நடித்தால் ”ஜிகர்தண்டா பார்ட் 2”வுக்கு கார்த்திக் சுப்புராஜ் வேறு ஹீரோவைத் தேடிப்போய் விடுவார். உஷாராக இருங்க பிரதர்.
லியோன் ஜேம்ஸ் இசையில் “ஜன்னல் காத்து போலவே”, “உன் காதல் இருந்தா போதும்”, “நான் இருந்தால் உன்னோடு” என பாடல்கள் எல்லாம் ஹார்ட் பீட்டுகள். பின்னணி இசையோ தகர டப்பாவுக்குள் சில்லறைகளை குவித்துப் போட்டு அடித்த கதை தான்.
அபிநந்தனின் ஒளிப்பதிவில் ஊட்டி, குன்னூர் எஸ்டேட் ஏரியாக்களில் மனசு ஜில்லிடுகிறது.
யூத்புல்லான ரொமாண்டிக் காமெடிப்படமாக வந்திருக்க வேண்டிய படம். வகை தொகையில்லாமல் படம் முழுக்க வருகிற ”டபுள் மீனிங்” வசனங்களால் பரங்கிமலை ஜோதி தியேட்டர் வகையறாவில் சேர்ந்து விடுகிறது.