இந்த ஹீரோவுக்கு இருட்டு என்றாலே பயமாம்!

Get real time updates directly on you device, subscribe now.

ரு சிலருக்கு கூட்டத்தை பார்த்தால் பயம், அதிலும் சிலருக்கு அந்த கூட்டத்தின் முன் பேச வேண்டும் என்றால் பயம். கத்தியை பார்த்தால் பயம், இரத்தத்தை பார்த்தால் பயம் என பலருக்கு பல வகையான பயம் இருக்கும். “V1” என்ற தலைப்போடு தயாராகி வரும் இப்படத்தின் கதாநாயகனுக்கு இருட்டு என்றாலே பயமாம்.

கதைப்படி கதாநாயகன் காவல்துறையில் வேலைபார்க்கும் ஒரு போலிஸ் அதிகாரி. V1 என்ற எண்ணை கொண்ட விட்டில் ஒரு கொலை நடக்கிறது. அந்த கொலைப்பற்றி விசாரிக்க வேண்டியகட்டாயத்திற்கு கதாநாயகன் உட்படுத்தபடுகிறான். இருட்டைப் பார்த்து பயப்படும் கதாநாயகன் இந்த கொலைக்கான மர்மத்தையும் கொலைக்காரனையும் கண்டுப்பிடித்தாரா என்பதே இந்தப் படத்தின் கதை.

இன்வஸ்டிகேட்டிவ் திரில்லரான இப்படத்தில் கதாநாயகனாக ராம் அருண் காஸ்ட்ரோ நடித்துள்ளார். கதாநாயகியாக விஷ்ணு பிரியா நடித்துள்ளார். மேலும் லிஜேஷ், மைம் கோபி, காயத்ரி, லிங்கா, மோனிகா, மனிஷா ஜித் உள்ளிட்டபலர் நடித்துள்ளனர்.

Related Posts
1 of 134

முழுக்க விறுவிறுப்பும் காட்சிக்கு காட்சி புதுப்புது யுக்திகளையும் அமைத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் பாவெல் நவகீதன். இவர் பிரபல திரைப்படங்களான ‘வட சென்னை’, ‘பேரன்பு’, ‘மகளிர் மட்டும்’, ‘குற்றம் கடிதல்’, ‘மெட்ராஸ்’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். மற்றும் இவர் விருதுகள் வாங்கிய பல குறும்படங்களை இயக்கியுள்ளார்.

பேரடைம் பிக்சர் ஹவுஸ் மற்றும் கலர்புல் பீட்டா முவ்மண்ட் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

விரைவில் பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன் வெளியிடும் இப்படம் முழுவதும் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது.