என் முன்னோடி இளையராஜா தான்- விஜய் ஆண்டனி!
விஜய் ஆண்டனி ,ஆத்மிகா நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் TD ராஜா தயாரிக்கும் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பட குழுவினர்களும் ,சிறப்பு அழைப்பாளர்களாக தயாரிப்பாளர் T சிவா ,விஜய் மில்டன் மற்றும் பலர் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர்.
விஜய் ஆண்டனி கூறியவை,
நீண்ட நாட்களுக்கு பிறகு பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களை சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்தப் இந்த படத்திற்கு பத்திரிகையாளர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் .இந்த படத்தின் பைனல் வெர்சனை பார்த்தேன். கண்டிப்பாக இந்த படம் மக்களுக்கு பிடிக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் .நான் இளையராஜா சாரை என்னுடைய முன்னோடியாக கொண்டு இசையமைக்க துவங்கினேன் .