டிக்கிலோனா- விமர்சனம்
என்னது சந்தானம் டைம் ட்ராவல் படத்தில் நடிக்கிறாரா!! என்பதை கேள்விப்பட்டவுடன் “ஓ மை கடவுளே..” என்ற feel எல்லோருக்கும் வந்திருக்கும். அதே ஆச்சர்யத்தோடு படத்தைப் பார்த்தால் கதை கூட ஓ மை கடவுளே படத்தின் கதையின் மூலம் தான். 2027- ஆம் மனைவியோடு வாழ்ந்து வரும் சந்தானத்திற்கு வாழ்க்கை நிம்மதி இல்லாமல் இருக்கிறார். சயிண்டிஸ்ட் யோகிபாபு & கோ உதவியால் 2020-க்கு பயணிக்கும் சந்தானம் தனக்கு நடந்த கல்யாணத்தை நிறுத்திவிட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்துவிட்டு திரும்புகிறார். வந்தபிறகு என்னானது..அடுத்தடுத்து நடக்கும் அதிர்ச்சியால் சந்தானம் என்ன மாதிரியான முடிவை எடுக்கிறார் என்பதை காமெடி கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குநர்.
படத்தில் “பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்” என்ற இளையராஜா பாடலை மிகச்சரியான இடத்தில் பொருத்தி இருக்கிறார்கள். படம் பார்க்கும் போது நம்மை தாளம் போட்டு ரசிக்க வைக்கிறது பாடல். இது படத்தின் முதல் பாசிட்டிவ். இயக்கம், படத்தின் மேக்கிங், பின்னணி இசை, ஒளிப்பதிவு, என டெக்னிக்கல் டீமும் பக்காவாக செட்டாகியிருக்கிறது..இது அடுத்த பாசிட்டிவ்..
திரைக்கதையில் இருக்கும் சுவாரசிய பஞ்சம் தான் படத்தை அநியாயத்திற்கு பஞ்சராக்குது. எந்த இடத்திலும் நம்மை ஆகா..செம்ம என சொல்ல வைக்கும் இடங்களே இல்லை. மிகச்சில இடங்களில் மட்டுமே வாய்விட்டு சிரிக்க முடிகிறது. யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், பின் சந்தானத்தின் டீம் என இத்தனை பேர் இருந்தும் சிரிப்பு பஞ்சம் ஏற்பட்டிருப்பது திரைக்கதையின் வீக் பாயிண்ட். இரு நாயகிகளும் பெரிய தாக்கத்கை ஏற்படுத்தவில்லை..
படம் துவங்கி 30 வது நிமிடத்திலே க்ளைமாக்ஸை யூகிக்க முடிவது இன்னொரு மைனஸ். சந்தானம் கூடுமான வரைக்கும் படத்தை தன் தோளில் தூக்கிச் சுமக்கிறார். பட் நமக்கு பாரமா இருக்கே..ஆக டிக்கிலோனாவிற்கு ப்ளூ டிக் போடமுடியவில்லை
2.5 /5