தனுஷ் – அனிருத் செய்த ‘100 மில்லியன்’ சாதனை!
இன்றைக்கு பல முன்னணி இயக்குநர்களின் சாய்ஸாக இருக்கும் அனிருத்தை உலக அளவில் ரசிகர்களிடையே கொண்டு சேர்த்த பாடல் ஒய் திஸ் கொலவெறி டி… தனுஷ் தயாரித்து அவருடைய காதல் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தில் இடம்பெற்ற இப்பாடல் சிங்கிள் டிராக் ஆக ரிலீசான உடனே உலகம் முழுவதும் பாப்புலராகி மியூசிக்கல் ஹிட்டானது.
இன்றுவரை அனிருத்தும், தனுஷும் எங்த பொது நிகழ்ச்சிக்கு போனாலும் இந்தப்பாடலை ரசிகர்கள் பாடச்சொல்லாமல் மேடையை விட்டு கீழே இறங்கவிடுவதில்லை.
அப்படிப்பட்ட அந்த ஒய் திஸ் கொலவெறி பாடல் சமீபத்தில் யு டியூப்பில் மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறது.
கடந்த 2011ம் ஆண்டு யு டியூப்பில் வெளியிடப்பட்ட இந்தப்பாடல் இப்போது சுமார் 100 மில்லியன் ரசிகர்கள் பார்த்து ரசித்திருக்கிறார்கள்.
அந்த வகையில் இந்தியாவிலேயே அதிகம் பேரால் பார்த்து ரசிக்கப்பட்ட மியூசிக்கல் வீடியோ என்கிற பெருமையை அந்தப்பாடல் பெற்றிருக்கிறது.
ஒரே ஒரு பாடல் ஓஹோன்னு வாழ்க்கை!