‘பாகுபலி’க்கு எதிராக பரவிய வதந்தி! : சீக்ரெட்டை உடைத்தார் லிங்குசாமி
‘இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படம்’ என்கிற படத்தின் கேப்சனைப் போலவே ‘பாகுபலி’யின் வெற்றியும் பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறது.
‘நான் ஈ’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் கடுமையான உழைப்பில் கிட்டத்தட்ட மூன்று வருடங்களை முழுசாக முழுங்கிய ‘பாகுபலி’யை ரிலீசாகி ரெண்டு வாரங்களாகியும் ரிசர்வேஷன் செய்துதான் பார்த்தாக வேண்டிய கட்டாயம் ரசிகர்களுக்கு.
அந்தளவுக்கு மிகப்பெரிய வரவேற்பைக் கொடுத்த ரசிகர்களுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த மீடியாக்களுக்கு நன்றி தெரிவிக்க சென்னை வந்தது ஹீரோ பிரபாஸ் உள்ளிட்ட சொற்ப கலைஞர்களோடு ‘பாகுபலி’ டீம்.
கூடவே தயாரிப்பாளங்க சங்கச் செயலாளர் டி.சிவா, இயக்குநர்கள் லிங்குசாமி, எம்.ராஜேஷ், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், தயாரிப்பாளர்கள் சி.வி.குமார், அபினேஷ் இளங்கோவன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் அப்பட டீமுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்திருந்தார்கள்.
சந்திப்பில் பேசிய ஹீரோ பிரபாஸ் “இந்த பிரம்மாண்ட வெற்றியைக் கொடுத்த தமிழ் மக்களுக்கு நான் மிகப்பெரிய நன்றியை தெரிவிச்சுக்கிறேன். ‘பாகுபலி’யை ஒப்புக்கிட்டதாக நாலைஞ்சு படங்களை நான் மிஸ் பண்ணிருப்பேன். அதனால எனக்கு கவலையில்ல. கடந்த ரெண்டு வருஷமா என்னோட டெடிகேஷன் எல்லாமே பாகுபலி மேல மட்டும் தான் இருந்துச்சு என்றவரிடம் பாகுபலியோட ரெண்டாம் பாகம் எப்போ வரும் என்று ஆவலோடு கேட்டார் ஒரு நிருபர்.
கண்டிப்பா 2016-இல் வந்துரும். 40 சதவீத வேலைகள் முடிஞ்சுருக்கு. இன்னும் 60 சதவீதம் பேலன்ஸ் இருக்கு. அந்த வேலைகளை முடியவும் படம் ரிலீசாகும் என்றார்.
விழாவில் பாகுபலி டீமை வாழ்த்திப் பேச வந்த இயக்குநர் லிங்குசாமி பேசும்போது : இந்தப்படம் ரிலீசான முதல்நாள் காலையில எனக்கு ஹைதராபாத்துல இருந்து ஒரு போன் வந்துச்சு. பாகுபலி மிகப்பெரிய தோல்விப்படம்னு சொன்னாங்க. அதைக்கேட்ட உடனே எனக்கு பெரிய ஷாக். பெரிய பெரிய வார்த்தைகளை பயன்படுத்தி எனக்கு வாட்ஸ் அப்பில் கூட மெசேஜ்கள் அனுப்பி வெச்சிருந்தாங்க.
அதையெல்லாம் ஒதுக்கி வெச்சுட்டு ராஜமெளலி சார் மேல இருந்த நம்பிக்கை, மூணு வருஷன் ஹீரோ பிரபாஸோட உழைப்பு, தமன்னா, அனுஷ்கா இவங்களோட ஒர்க் எல்லாமே கண்டிப்பா நல்லா இருக்கும்னு நம்பி தியேட்டருக்கு படம் பார்க்கப் போனேன்.
படத்தோட ஒவ்வொரு சீனும் காலையில எனக்கு வந்த போனை உடைச்சி தூள் தூளாக்கிட்டிருந்துச்சு. அப்படி ஒரு பிரம்மிப்பையும், பிரம்மாண்டத்தையும் நான் பார்த்தேன். இப்படி ஒரு பிரம்மாண்டத்தை இதுவரைக்கும் எந்த இந்திய சினிமாவுலேயும் நாம பார்க்கல. இன்னைக்கு இந்தியா முழுக்க பாகுபலி பாகுபலின்னு ரசிகர்கள் கத்துற சத்தம் கேட்குது.
இந்த ‘பாகுபலி’யின் பிரம்மாண்ட வெற்றி அடுத்தடுத்து வரப்போற பெரிய பட்ஜெட் படங்களுக்கு மிகப்பெரிய பலமா இருக்கும் என்றார் லிங்குசாமி.
மூத்தவங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்!