ஒரு படம் தான் ரிலீஸ்… : அதுக்குள்ள கால்ஷூட் சொதப்பல்

Get real time updates directly on you device, subscribe now.

mala

‘கும்கி’ படத்தில் நடிக்க வந்த போது 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார் லட்சுமிமேனன்.

தொடர்ந்து சுந்தரபாண்டியன், பாண்டியநாடு என அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்தவருக்கு தி்டீரென்று படித்த பள்ளியிலிருந்து அழைப்பு வர, சினிமாவுக்கு தற்காலிகமாக குட்பை சொல்லிவிட்டு படிக்கப் போய் விட்டார்.

அந்த நேரத்தில் வந்த வாய்ப்புகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் ஸ்ரீதிவ்யா. இதனால் பல ஹிட் படங்களை லட்சுமிமேனன் கையை விட்டுப் போயின.
இப்போது அதே போன்றதோரு இக்கட்டில் தான் இருக்கிறாராம் குக்கூ படத்தில் நடித்த மாளவிகா (நாயர்).

இப்போது தெலுங்கில் ‘கல்யாண வைபோகமே’ என்ற படத்தில் நடித்து வரும் மாளவிகா கால்ஷூட் சொதப்ப ஆரம்பித்திருக்கிறார்

பிளஸ் 2 எக்ஸாம் வருது, அதுக்கு படிக்க வேண்டியிருக்கிறதுனால ரெண்டு மாசம் லீவு வேணும் என்று அப்படத்தின் இயக்குநரிடம் கேட்டு அடம்பிடிக்கிறார்.

இயக்குநரோ எங்கே இவர் படிப்பு என்று போய் விட்டால் தன்னுடைய பட ரிலீஸ் லேட்டாகி விடுமோ என்கிற பதட்டத்தில் இதோ, அதோ என்று டிமிக்கி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

படிக்கிற புள்ளையை நடிக்க வெச்சா இதுதான் கதி போல..?