நித்யாமேனனுக்கு சிபாரிசு : செய்றது யார் தெரியுமா..?

Get real time updates directly on you device, subscribe now.

Nithya1

ந்த மாதிரியான பல விசித்திரங்கள் அவ்வப்போது சினிமாவில் நடக்கத்தான் செய்யும்!

நடிகர்களை விட பட வாய்ப்புகளை பிடிப்பதில் நடிகைகள் மத்தியில் தான் போட்டி அதிகமாக இருக்கும். அதுவும் தெலுங்கில் அனுஷ்கா, காஜல் அகர்வால், ஸ்ருதிஹாசன் என முன்னணி நடிகைகள் அத்தனை பேருமே இந்த கோதாவில் குதித்திருப்பது அவ்வப்போது வரும் செய்திகள் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

Related Posts
1 of 13

இப்படிப்பட்ட போட்டி மனநிலையிலும் தனது தோழி நித்யாமேனனுக்காக புதுப்படங்களை ரெகமெண்ட் செய்கிறாராம் சமந்தா.

அப்படித்தான் சமீபத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றில் நித்யாமேனனை ரெகமெண்ட் செய்திருக்கிறார் சமந்தா. ஏற்கனவே இருவரும் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்தபோது நெருங்கிய தோழிகளாகி விட்டதே சமந்தாவின் இந்த இளகிய மனசுக்கு காரணம் என்கிறார்கள்.

இரண்டு ஹீரோயின்கள் சப்ஜெக்ட்டோடு எந்த இயக்குநர் வந்தாலும் ஒரு ஹீரோயின் நான் இன்னொரு ஹீரோயின் நித்யாமேனன் என்பது தான் இயக்குநர்களுக்கு சமந்தா போடும் முதல் கண்டிஷனாம்.