விஜய் இடத்தில் ராகவா லாரன்ஸ் : இயக்குநரின் அதிரடி முடிவு

Get real time updates directly on you device, subscribe now.

vijay1

அட்லி இயக்கத்தில் ‘தெறி’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்த ஐந்து மாதங்களுக்கு ஓய்வெடுக்கும் விஜய் அடுத்ததாக 60வது படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தை யார் இயக்குவார் என்கிற சந்தேகம் எழுந்தபோது ‘தனி ஒருவன்’ இயக்குநர் மோகன்ராஜா உட்பட அரை டஜன் இயக்குநர்களின் பெயர்கள் அடிபட்டது. இறுதியில் பரதனுக்கு அந்த வாய்ப்பை கொடுத்தார் விஜய்.

Related Posts
1 of 88

ஒருபுறம் படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருக்க, இன்னொரு புறம் ‘ஜிகர்தண்டா’ இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கத் தயாராகி வருவதாக செய்திகள் வெளியானது. த்ரில்லர், ஆக்‌ஷன் கதையான இக்கதையை 60-வது படத்தை இயக்க தனக்கு வாய்ப்பு கொடுப்பார் என்கிற நம்பிக்கையில் விஜய்யை மனதில் வைத்து தயார் செய்து வைத்திருந்தாராம் கார்த்திக் சுப்புராஜ்.

ஆனால் விஜய் பேக்கடித்து விட்டதால் அவருக்கு காத்திராமல் லாரன்ஸை நடிக்க வைக்க முடிவு செய்து விட்டார்.