1 கோடி வேணும் : ரொம்பத்தான் ஆசைப்படுறாராம் ‘டேவிட் புள்ள’ டைரக்டர்!

முதல் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எப்படி ரெஸ்பான்ஸ் இருக்கிறது என்பதை பார்க்க ஆவலோடு தியேட்டருக்கு போனார் த்ரிஷா இல்லேன்னா நயன் தாரா பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.
போன இடத்தில் அவரை சூழ்ந்து கொண்ட பெண்கள் இவ்வளவு கேவலமான படத்தை எடுத்துட்டு தைரியமா தியேட்டருக்கு கூட வர்றீயா என்று செருப்பைத் தூக்கி அடிக்கப் பாய அப்போதும் பயப்படாதவர் அதுதான் ஏ சர்ட்டிபிகேட்டுன்னு போட்டுருக்குல்ல அப்புறம் ஏன் என் படத்தை பார்க்க வர்றீங்க… என்று பதிலடி கொடுத்தார்.
இதெல்லாம் த்ரிஷா இல்லேன்னா நயன் தாரா ரிலீசான சமயத்தில் நடந்த சம்பவம்.
என்ன தான் பெண்கள் எதிர்த்தாலும் மகளிர் அமைப்புகள் பார்வையில் அந்தப்படத்தைப் பற்றி விஷயம் உடனே போகாததால் படம் இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வசூலும் சிறப்பாக அமைந்து விட்டது.
இதனால் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு மவுசும் கூடி விட்டது. மீண்டும் ஜி.வி.பிரகாஷே அவருடைய இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஆசைப்பட, அவரோ சிம்புவை வைத்து இயக்கி விட்டு அடுத்த படத்தில் நாம் இணையலாம் என்று சொல்லி விட்டார்.
அந்தளவுக்கு பிசியாக ஆரம்பித்திருக்கும் அவர் தான் படம் இயக்க வேண்டுமென்றால் சம்பளமாக 1 கோடி ரூபாய் தர வேண்டும் என்று தன்னைத் தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் கேட்டு பீதியை கெளப்புகிறாராம்.