”பேட்ட” பட வாய்ப்பை தட்டிப் பறித்தாரா த்ரிஷா? – சூர்யா பட நடிகை குமுறல்

Get real time updates directly on you device, subscribe now.

சூர்யா – விக்னேஸ்வரன் கூட்டணியில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்தவர் மீரா மிதுன்.

அதற்கு முன்பே ‘8 தோட்டாக்கள்’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்த இவர், இந்த படத்தின் மூலம் இன்னும் அதிகம் கவனிக்கப்பட்டார்.

சினிமாவிற்கு தான் இவர் புதிது.. ஆனால் மாடல் உலகில் கிட்டத்தட்ட இவர் ஒரு நயன்தாரா என்றே சொல்லலாம். ஆம்.. சர்வதேச அளவில் மோஸ்ட் வான்டட் தென்னிந்திய மாடல் முதல் சாய்ஸாக இருப்பது மீரா மிதுன் தான்.

பலரும் இவரை சினிமாவில் நடிக்கச் சொல்லி வற்புறுத்தி வந்த நிலையில், அதில் அவ்வளவாக ஆர்வம் காட்டாத இவர் ‘கிரகணம்’ படத்தில் கூட ஒரு மாடலாகவே வந்து சென்றார். அதன்பின் ‘8 தோட்டாக்கள்’ படத்தில் கொஞ்சம் நெகடிவ் சாயல் கலந்த ஒரு கேரக்டரில் நடித்த இவரைத்தேடி தொடர்ந்து ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது

மீரா மிதுனின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும், அடுத்தடுத்து தேடி வந்த பல பட வாய்ப்புகள் இவருக்கு திருப்திகரமாக இல்லை. அதனால் தற்போது செலக்டிவாக சில படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் மீரா மிதுன்.

Related Posts
1 of 76

மாடலிங் சினிமா இரண்டிலுமே சமமான கவனம் செலுத்தவே விரும்புகிறார் மீரா மிதுன்.. மாடலிங்கில் இருந்தபோதே இவரை ஊக்கப்படுத்தி அவ்வப்போது உற்சாகம் கொடுத்த நடிகர் விஷால், சினிமாவிற்கு வருமாறு முன்பே அழைப்பு விடுத்திருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் நடிப்பதற்காக ஆடிஷனுக்கு அழைக்கப்பட்ட மீரா மிதுன், லுக் டெஸ்ட், ஸ்கிரீன் டெஸ்ட் வரை சென்றுவிட்டார். ஆனால் ஏதோ சில காரணங்களால் அந்த வாய்ப்பு அவருக்கு கைகூடாமல் போய்விட்டது. அவருக்குப் பதிலாக பின்னர் அந்த கேரக்டரில் நடித்தவர் த்ரிஷா என சமீபத்தில் தான் தெரியவந்ததாம் மீராவுக்கு.

அதேபோல கமல் தயாரிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘கடாரம் கொண்டான்’ படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் மீரா மிதுன். அதுவும் சில காரணங்களால் கடைசி நேரத்தில் இவரை விட்டு விலகிப்போனது.. விலகிப்போன வாய்ப்புகள் மீண்டும் வேறு வடிவத்தில், வேறு படங்களில் தன்னைத் தேடிவரும்” என திடமாக நம்புகிறார் மீரா மிதுன்.

ஏற்கனவே ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டுமென்று பல ஆண்டுகளாக எதிர்பார்த்துக் காத்திருந்த த்ரிஷா பேட்ட பட வாய்ப்பை வழியப் போய் வாங்கினார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் மீராமிதுனின் இந்தக் குமுறலைப் பார்க்கும் போது அவருக்கு போயிருக்க வேண்டிய வாய்ப்பை தட்டிப் பறித்திருக்கிறார் த்ரிஷா என்பது உறுதியாகியிருக்கிறது என்கிறார்கள் கோலிவுட்டில்.