மீசைய முறுக்கு2! ஹிப்ஹாப் ஆதி கொடுத்த ஹிண்ட்

Get real time updates directly on you device, subscribe now.

“முதல் பாகத்தில் எனது தந்தை கதாபாத்திரத்தில் நடித்த மறைந்த விவேக் சாரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. ஆனால், ‘மீசைய முறுக்கு 2’ மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் பயணிக்கும் கதை. இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தந்தை கதாபாத்திரம் ஒன்று உள்ளது. அந்தக் கதாபாத்திரத்திற்கு பாபா பாஸ்கர் மாஸ்டர்தான் சரியான தேர்வு என்று நான் நினைத்தேன்.”

பாபா பாஸ்கர் மாஸ்டர் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்ட விதம் குறித்தும் ஆதி பகிர்ந்துகொண்டார்:

“ஆரம்பத்தில் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொள்வதில் அவருக்கு சற்று தயக்கம் இருந்தது. ஆனால், என் மீது நம்பிக்கை வைத்து அந்தக் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டார். மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக அவருக்கு மிக முக்கியமான இடம் கிடைக்கும் என்று நான் உண்மையாக நம்புகிறேன்.”
மேலும் படம்பற்றி பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்தார்!