அடுத்தது பொங்கல் : மீண்டும் ரசிகர்களை மோத விடும் விஜய் – அஜித்!

Get real time updates directly on you device, subscribe now.

 

vijay

மூக வலைத்தளங்களில் யார் ரசிகர்கள் மோதிக்கொள்கிறார்களோ இல்லையோ குண்டூசி சைஸ் பிரச்சனையாக இருந்தாலும் விடிய விடிய தூங்காமல் ட்விட்டரில் மோதிக்கொள்வது விஜய் – அஜித் ரசிகர்களுக்கு பழக்கமாகி விட்டது.

இரண்டு பேர் ரசிகர்களின் இந்த சமூக சண்டை பல மட்டங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தாலும் மேற்படி ரசிகர்களைப் பெற்ற விஜய்யோ, அஜித்தோ இன்று வரை சண்டை போடாமல் அமைதியாக இருங்கள் என்று ரசிகர்களுக்கு அறிவுரை சொன்னதே இல்லை.

இருவருமே ஒவ்வொரு படத்தின் ரிலீசின் போதும் மோதிக்கொள்ளும் விஜய் – அஜித் ரசிகர்கள் இப்போதும் மீண்டும் மோதிக்கொள்ளும் சூழல் உருவாகியிருக்கிறது.

Related Posts
1 of 118

ஒரு வாரத்துக்கு முன்பு தான் அஜித்தின் 57-வது படம் பூஜை போடப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. வருகிற ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவித்து விட்ட நிலையில் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வரும் என்றும் உறுதியான தகவல் வெளியானது.

இப்போது அதே பொங்கலுக்குத்தான் விஜய் நடித்து வரும் விஜய் 60 படமும் ரிலீசாகப் போகிறது என்கிற தகவல் வெளியாகிருக்கிறது.

கடந்த இரண்டு வருடங்களாகவே தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ தினங்களில் விஜய் – அஜித் படங்கள் நேருக்கு நேர் மோத ஆரம்பித்திருக்கின்றன.

இது இருவரது ரசிகர்களுக்கிடையே கொண்டாட்ட மனநிலையை உருவாக்கி விடுவதை விட, யார் படம் பெருசு? என்கிற விரோதத்தை தொடர்ந்து வளர்த்து வருகிறது என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் நிலையில் இப்போது மீண்டும் விஜய் – அஜித் படங்கள் பொங்கல் தினத்தில் ஒரே நாளில் ரிலீசாவது குறிப்பிடத்தக்கது.

சம்பந்தப்பட்டவங்க யோசிச்சா ரசிகர்களுக்கு நல்லது!