இது உங்களுக்கே நியாயமா இருக்கா விஜய்? : சர்ச்சையைக் கிளப்பிய மெர்சல் பார்ட்டி!

Get real time updates directly on you device, subscribe now.

DNs1RdmX4AAhUJn

பி.ஜே.பியின் தமிழகத் தலைமைகள் ஆற்றிய எதிர் வினையால் உலகமே கொண்டாடும் பாக்ஸ் ஆபீஸ் மெகா ஹிட் படமாகி விட்டது விஜய்யின் ‘மெர்சல்’.

இரண்டாவது வாரத்துக்குள் 200 கோடி ரூபாயை கலெக்‌ஷன் எட்டி விடும் என்கிற உறுதியான தகவல் வந்த பிறகும் அதை பார்ட்டி வைத்து கொண்டாடாமல் இருக்க முடியுமா?

கொண்டாடலாம் தான். ஆனால் அதை எப்போது கொண்டாடியிருக்க வேண்டும்? என்பதில் தான் விஜய் பெயர் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதுமுள்ள ஊர்களில் மக்கள் கன மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்கள். ஆங்காங்கே தேங்கி நிற்கும், தெருவில் ஓடும், வீட்டை மிதக்க விட்ட மழை நீரினாலும், வெள்ளத்தினாலும் அவர்கள் படும் அவஸ்தை கொஞ்ச நஞ்சமில்லை.

Related Posts
1 of 79

mersal

இப்படிப்பட்ட ஒரு சூழலில் ‘மெர்சல்’ படத்தின் வெற்றியை அப்படத்தின் டைரக்டர் அட்லீ, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட படக்குழுவினருடன் தன் நீலாங்கரை வீட்டில் விடிய விடிய கொண்டாடியிருக்கிறார் நடிகர் விஜய்.

இந்தப் பார்ட்டியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் கலந்து கொண்டது தான் ஹைலைட். ஆனால் நல்ல வேளையாக அவர் ஒரே ஒரு பொக்கேவை கொடுத்து விட்டு உடனே அங்கிருந்து கிளம்பி விட்டார்.

அதன்பிறகு வீட்டுக்கு வெளியே மழை கொட்டித் தீர்க்க, பார்ட்டிக்குப் போன படக்குழுவினர் விஜய் வீட்டுக்குள் இருந்த உயர் ரக மது வகைகளை விடிய விடிய போதுமென்கிற அளவுக்கு ஊற்றி ருசி பார்த்திருக்கிறார்கள்.

முதல்வர் கனவுடன் இருக்கும் ஒருவர் மழையினால் மக்கள் அவதிப்படும் இந்த நேரத்தில் தான் பட வெற்றியை பார்ட்டி வைத்து கொண்டாடி மகிழ்வாரா? என்பது தான் அது சம்பந்தமான புகைப்படங்களைப் பார்த்து விஜய்யை நோக்கி கோபத்தோடு எழுப்பும் கேள்வி?