ஃபர்ஹானா- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

இஸ்லாமிய சட்டத்திட்டங்களை மீறும் ஒரு பெண்ணின் வாழ்க்கை அனுபவமே இப்படம்

இஸ்லாமி சட்டத்தை நடைமுறைகளோடுப் பொருத்திப் பார்க்காத ஒரு குடும்பத்தில் வசிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். கணவனும் படிப்பறிவோ பட்டறிவோ இல்லாதவர். வறுமை வேறு வாழ்வைப் பிச்சித் தின்கிறது. எப்படியாவது வேலைக்குச் செல்ல வேண்டும் என ஐஸ்வர்யா ராஜேஷ் முடிவெடுக்க வேலை கிடைத்து வேலையிலும் சேர்கிறார். கால் சென்டர் வேலைக்குச் செல்லும் அவருக்கு அங்கு வேறோர் உலகம் திறக்கிறது. ஆண்களிடம் செக்ஸியாகப் பேசும் ஒரு வேலை அவருக்கு வழங்கப்பட, அதற்கு அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் என்னென்ன முடிவுகளை எடுக்கிறார் என்பதே ஃபர்ஹானாவின் மீதிக்கதை

ஐஸ்வர்யா ராஜேஷ் நல்ல நடிப்பு என்பதை தன் வாழ்வோடு இணைத்திருக்கிறார் போல. எந்தக் கேரக்டர் கொடுத்தாலும் அதை அவரால் வெகு சுலபமாகச் செய்ய முடிகிறது. இந்தப்படத்திலும் தன் கேரக்டரின் தன்மை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். ஜித்தன் ரமேஷ் ஐஸ்வர்யா ராஜேஷின் கணவராக மிகச்சிறப்பாக நடித்துள்ளார். கிட்டி தன் வேலையை மிகச்சரியாகச் செய்து படத்திற்கு பெருந்துணை செய்துள்ளார்

Related Posts
1 of 2

ஜஸ்டின் பிரபாகரனின் இசை ஃபர்ஹானாவிற்கு எக்ஸ்ட்ரா வேல்யூவை கொடுத்துள்ளது. பின்னணி இசை மூலமாக கதை சொல்லும் உணர்வுகளை சரியாக ரசிகனுக்கு கடத்த உதவியுள்ளார். ஒளிப்பதிவாளரும் கதையின் சாராம்சத்தைப் புரிந்துகொண்டு தன் வேலையைச் சரியாகச் செய்துள்ளார்

படத்தில் பாசிட்டிவ் அம்சங்கள் நிறைய இருந்தாலும் படம் மிக நிதானமாக பயணிக்கிறது. அது பல இடங்களில் நமக்குச் சலிப்பைத் தருகிறது. இருந்தும் நல்ல முயற்சியும் மெஜேசும் இருப்பதால் ஃபர்ஹானாவை ஒருமுறை ரசிக்கலாம்
2.75/5

#ஃபர்ஹானா #farhana