விசாரணையில் நகரும் சுசீந்திரனின் ‘ஏஞ்சலினா’

Get real time updates directly on you device, subscribe now.

மீபத்தில் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தில் நடித்ததற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கும் இயக்குனர் சுசீந்திரனின் இயக்கத்தில் ‘ஏஞ்சலினா’ படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது.

படம் பற்றி அவரிடம் கேட்டபோது, “ஏஞ்சலினா அடிப்படையில் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர். படமே ஒரு விசாரணையில் தான் துவங்குகிறது. அதே சமயத்தில் இளைஞர்களின் கதாபாத்திரங்களை உள்ளடக்கிய கதையையும் இதில் நான் கலந்து சொல்லியிருக்கிறேன்.

இருப்பினும், படத்தின் மையக்கரு ஒரு பெண் எவ்வாறு வாழ வேண்டும் மற்றும் அவர் எதிர்கொள்ளும் சிக்கல்களை எவ்வாறு கையாள வேண்டும் என்ற சமூக விழிப்புணர்வை அடிப்படையாகக் கொண்டது.

Related Posts
1 of 140

”சரண் சஞ்சய் இந்த படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். கிரிஷா குரூப் (கோலி சோடா 2 புகழ்) நாயகியாக நடிக்கிறார். சூரி மற்றும் தேவதர்ஷினி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

நான் டி.இமான் உடன் நான் இணைவது இது ஆறாவது முறையாகும். அவருடைய இசைக்கு கிடைத்துள்ள வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. முன்னதாக என்னுடன் ”ஆதலால் காதல் செய்வீர்” போன்ற திரைப்படங்களில் பணியாற்றிய ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவை கையாளுகிறார்” என்றார்.

இந்த படம் விசாரணை மூலம் நகரும் ஒரு சஸ்பென்ஸ், திரில்லர் என்பதால் படத்தின் நீளம் என்ன என்பதை அறிய அனைவருக்கும் ஆவல் இருக்கும். ஆம், இது 1 மணி நேரம் 50 நிமிடங்கள் ஓடும் படம். மிகவும் வேகமாக, ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்கும்.