எல்லாருமே ‘பெரிய்ய…’ ஆளுங்க! : தொடங்கியது சிவகார்த்திகேயனின் பிரமாண்டப் படம்!!

Get real time updates directly on you device, subscribe now.

siva

டுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியையும் மிகவும் கவனமாக எடுத்து வைக்கிறார் சிவகார்த்திகேயன்.

அதனால் தான் நடிக்க வந்த சில வருடங்களிலேயே முன்னணி ஹீரோக்களின் பட்டியலில் இடம் பிடித்து விட்டார். தயாரிப்பாளர்களின் செல்லப் பிள்ளையாகிய சிவகார்த்திகேயனின் வெற்றியில் அவரது உழைப்பு என்பது மிக மிக அதிகம். அதன் பலன்களைத் தான் இப்போது தொடர் ஹிட்டுகள் மூலமாக அறுவடை செய்து கொண்டிருக்கிறார்.

‘காக்கிச் சட்டை’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் ‘ரஜினி முருகன்’ படம் ரிலீசுக்கு தயாராகியிருக்கிறது.

அடுத்து என்ன? என்கிற தனது ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு இன்று பெரிய விருந்தே வைத்தார் சிவகார்த்திகேயன்.

தனது நெருங்கிய நண்பரான ஆர்.டி.ராஜா 24AMSTUDIOS என்ற புதிய பட நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

Related Posts
1 of 32

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் புதிய படத்தை இயக்குனர்கள் சுந்தர்.சி, அட்லீ ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய புதிய இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் காதலும் நகைசுவையும் கலந்து கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.

இவருடன் ஒளிப்பதிவுக்கு பி.சி.ஸ்ரீராம், இசைக்கு அனிருத், அரங்க அமைப்புக்கு டி. முத்துராஜ், படத்தொகுப்புக்கு ரூபன், ஒலி வடிவமைப்புக்கு ஆஸ்கார் விருதுப் பெற்ற ரசூல் பூக்குட்டி, சண்டை இயக்கத்துக்கு அனல் அரசு, சிறப்பு ஒப்பனைக்கு WETA நிறுவனத்தை சார்ந்த ஷான் ஃபுட் என இந்திய சினிமாவின் ஆகச்சிறந்த, புகழ்பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கு பெருகிறார்கள் என்பது தான் சந்தோஷம் தரும் செய்தியாகும். கதாநாயகி உள்ளிட்ட மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று கொண்டு இருக்கிறது.

இவர்களின் பங்களிப்போடு இன்று இனிதே ஆரம்பிக்கப்பட்டது இந்தப் படத்தின் துவக்க விழா!

இதுகுறித்து தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா கூறியதாவது : ‘ஒரு படத்தின் உன்னதமான தொழில்நுட்ப கலைஞர் குழு படத்தின் வெற்றியை பெரிதளவு தீர்மானிக்கிறது. எனது முதல் படத்தில் இத்தகைய பிரசித்திப் பெற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரிவது எனக்கு மிக்க பெருமை. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அவர் இதுவரை ஏற்றிராத ஒரு புதிய பாத்திர படைப்பு. இந்தப் படம் அவரது கலை பயணத்தில் ஒரு முக்கிய படமாக இருக்கும். தொழில் நுட்பகலைஞர்கள் தேர்வைப் போலவே மற்ற நடிகர், நடிகையர் தேர்வும் மிக மிக பெரியதாக இருக்கும். காதலுக்கும், நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் இந்தப் படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் என்பதில் ஐயமே இல்லை.

என்னுடைய நிறுவனமான 24AM STUDIOS தரமான படங்களையும், உன்னதமான தொழில்நுட்ப கலைஞர்களையும் ஆதரித்து ஊக்குவிக்கும்’ என்று உறுதியுடன் கூறினார் தயாரிப்பாளர் ஆர். டி ராஜா.

வெற்றிகள் இனிதே வந்து குவியட்டும்!