2017-க்குள் நடிகர் சங்கத்துக்கு புதுக்கட்டிடம்! : விஷால் திட்ட வட்டம்

Get real time updates directly on you device, subscribe now.

vishal1

ந்த தேர்தல் முடிவையும் இந்தளவுக்கு எதிர்பார்த்திருக்காது தமிழ் கூறும் நல்லுலகம்.

அந்தளவுக்கு மூவாயிரத்து சொச்சம் மெம்பர்கள் உள்ள நடிகர் சங்கத் தேர்தல் பரபரப்பாக நடந்தேறி இப்போது ரெகுலர் நிலைக்கு நடிகர் சங்கம் வந்து விட்டது.

நடிகர் சங்க வேலைகள் ஒருபக்கம், பாண்டிராஜ் இயக்கத்தில் கதகளி படப்பிடிப்பு ஒருபக்கம் என பிஸிக்கு மத்தியிலும் இன்று நம்மை நேரம் ஒதுக்கி சந்தித்தார் விஷால்.

நடிகர் சங்கத் தேர்தலில் எங்கள் ‘பாண்டவர் அணி’ வெற்றி பெற்றதுக்கு மீடியாக்கள் நடுநிலை வகித்ததும் முக்கிய பங்கு உண்டு. அந்த வகையில் நான் என்றைக்குமே உங்களை என் நெஞ்சத்தில் வைத்திருப்பேன். முன்பெல்லாம் மாலை ஆறு மணிக்கு ஷூட்டிங் முடிந்ததும் வீட்டுக்குப் போவோம். இப்போது அந்த நேரத்தை நடிகர் சங்க வேலைகளுக்காக ஒதுக்கி விட்டோம்.

வெற்றி பெற்ற எல்லா நிர்வாகிகளும் நடிகர் சங்கத்துக்கு வந்து வேலைகளைச் செய்கிறார்கள். இந்த நேரத்தில் எங்கள் அணியின் சார்பில் வெற்றி பெற்ற எல்லா நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Posts
1 of 66

நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டும் வேலைகள் நடைபெற்று வருகிறது. விரைவில் அதற்காக அறிவிப்பை வெளியிடுவோம் என்றவர் தனது படங்களைப் பற்றிப் பேசினார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் நான் நடிக்கும் கதகளி படம் பெரும்பகுதி முடிந்து விட்டது. கிளைமாக்ஸ் மட்டும் தான் பாக்கி. நான் நடித்த மதகஜராஜா திரைப்படம் வெளியாகிறதா என்று சிலர் என்னிடம் கேட்டார்கள். அந்த விபரம் எனக்குத் தெரியவில்லை. வந்தால் ஒரு நடிகனாக நான் சந்தோஷப்படுவேன். கதகளி படத்தை அடுத்து கொம்பன் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ‘மருது’ என்ற படத்தில் நடிக்கிறேன்.

இந்தப் படங்களை முடித்த பிறகு நடிகர் சங்கத்துக்காக ஒரு பிரம்மாண்டப்படத்தில் நடிக்கப் போகிறேன். அது பற்றிய விபரங்களை விரைவில் அறிவிப்பேன். அது என் வாழ்நாளில் ஒரே ஒரு தடவை நிகழக்கூடியது. அது ஒரு கமர்ஷியல் படமாகவும், ரசிகர்களுக்கு பிடிக்கும் படமாகவும் இருக்க வேண்டும் என்பதால் எந்த மாதிரியான கதை என்பதை ஆலோசித்து வருகிறோம்.

என்றவரிடம் அதில் கமல்ஹாசன் நடிப்பாரா என்கிற கேள்வி எழுந்தது? கண்டிப்பாக கேரக்டர் இருந்தால் கமல் சார் நடிப்பார். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்றார்.

நீங்கள் நடிக்கப் போகும் மருது படத்தில் ராதாரவியும் நடிக்கிறாராமே? உண்மையா? என்று கேட்டபோது அது பற்றிய விபரம் எனக்குத் தெரியவில்லை. அதை இயக்குநர் முத்தையா தான் முடிவு செய்வார். அவர் நடிக்கக்கூடிய கேரக்டர் இருந்தால் கண்டிப்பாக இருப்பார். தேர்தல் வேறு, நடிப்பு வேறு இரண்டையும் குழப்பிக் கொள்ளக்கூடாது. ராதாரவியுடன் மட்டுமில்லை, சரத்குமார் சாருடனும் இணைந்து நடிக்கத் தயாராகவே இருக்கிறேன் என்றவர் 2017-ம் ஆண்டுக்குள் நடிகர் சங்கத்தின் புதுக்கட்டிடம் வந்து விடும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.