‘மிஸ்டர் லோக்கல்’ ஆன சிவகார்த்திகேயன்!

Get real time updates directly on you device, subscribe now.

‘சீமராஜா’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் புதுப்படத்துக்கு ‘மிஸ்டர் லோக்கல்’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது.

நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்தை ‘சிவா மனசுல சக்தி’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்குகிறார். ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

Related Posts
1 of 191

இப்படி ஒரு லோக்கலான டைட்டில் ஏன்? என்று இயக்குனர் ராஜேஷிடம் கேட்டபோது, “இந்த படத்துக்காக பல்வேறு டைட்டில்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த படத்தின் கதைக்கு “மிஸ்டர் லோக்கல்” என்கிற டைட்டில் தான் பொருந்தும் என்பதால் இதை வைத்தோம்.

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது. போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளும் நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறைக்கு “மிஸ்டர் லோக்கல்” படம் திரைக்கு வரும்” என்றார்.