அதிரவைத்த அயலான்- தயாரிப்பாளர்
சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் பட்ஜெட்டில் “இன்று நேற்று நாளை” இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் 24AM நிறுவனம் சார்பில் RD ரஜா தயாரிக்கும் படத்திற்க்கு “அயலான்” எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இப்படம் பற்றி 24AM நிறுவனம்
தயாரிப்பாளர் RD ரஜா கூறியதாவாது….
“எங்கள் 24AM நிறுவனம் சார்பில் தயாராகும் அயலான் படத்தின் தலைப்பிற்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்திப்பது பெரு மகிழ்ச்சி. மேலும் எங்கள் கோரிக்கையின் பேரில், இசைப்புயல் A R ரஹ்மான் தலைப்பை அறிவித்தது எங்களுக்கு பெருமை. இந்தப்படம் ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே A R ரஹ்மான் அவர்கள் தனது சொந்தப் படம் போல் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தார்.
எங்களையும் படம் பற்றிய ஒவ்வொரு சிறு வேலைகளிலும் வெகுவாக ஊக்குவித்தார். தலைப்பிற்காக அவர் உருவாக்கிய ஒரு இசைத்துணுக்கே அபாரமானதாக இருந்தது. அவரது இசை இப்படத்தின் முதுகெலும்பாக இருக்கும்” என்றார்