மிஸ்டர் எக்ஸ்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

ஆர்யா, சரத்குமார், மஞ்சு வாரியர், கெளதம் ராம் கார்த்திக் என இந்த வித்தியாச கூட்டணியை ஒருங்கிணைத்த இயக்குநர் மனு ஆனந்த் படத்தின் திரைக்கதையை சரியாக ஒருங்கிணைத்தாரா?

பார்க்கலாம்!

கல்பாக்கம் அனுமின் நிலையத்திற்குள் சென்று தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய அழிவை நிகழ்த்த திட்டமிடுகிறார் கெளதம் ராம் கார்த்திக். அவருக்கு மேல் ராணா என்ற முகம் தெரியாத பாஸ் ஒருவரும் உண்டு. இந்த அழிவுத்திட்டத்தை ஸ்மெல் பண்ணுகிறார் ரா எஜெண்ட் ஆன மஞ்சுவாரியர். ஆர்யாவும் அவரின் குழுவில் ஒருவர். காதலியை கரம்பிடிக்க நினைத்து வேலையை துறக்க ஆர்யா முடிவெடுக்கும் சூழலில், இந்தப் பேரழிவை மீட்கும் பணி அவருக்கு வழங்கப்படுகிறது. மெயின் வில்லன் ராணா யார்? ஆர்யா டீம் அழிவை தடுத்து நிறுத்தியதா என்பது படத்தின் மீதிக்கதை

ஆர்யா தன் உடலை வருத்தி பேருழைப்பைப் போட்டுள்ளார். ரிசல்ட் ஸ்கிரீனில் தெரிகிறது. சரத்குமார் க்ளைமாக்ஸில் வேறலெவல் மாஸ் காட்டுகிறார். கெளதம் ராம் கார்த்திக் நெகட்டிவ் கேரக்டரில் சோடை போகாமல் அசத்தியுள்ளார். ஆச்சர்யப்பட வைத்துள்ளார் மஞ்சு வாரியர். காரணம் ஆக்சனில் அவரின் எனர்ஜி லெவல் அப்படி! அதுல்யா ரவி, மானகா, ரைஸா வில்சன் என மூன்று ஹீரோயின்ஸ் படத்தில். மூவரும் கொடுத்த வேலையைக் கச்சிதமாகச் செய்துள்ளனர்

அருள் வின்செண்ட் ஆகச்சிறந்த ஒளிப்பதிவைக் கொடுத்துள்ளார். நிறைய ஷாட்ஸ் ஹாலிவுட் தரம். இசையமைப்பாளர் திபு பேக்ரவுண்ட் ஸ்கோரில் ரவுண்ட் கட்டி அடித்துள்ளார். பாடல் ஒகே ரகம்

எல்லா டெக்னிஷியன்ஸையும் ஒருங்கிணைத்து நல்ல அவுட்புட்-ஐ கொண்டு வந்துள்ளார் இயக்குநர் மனு ஆனந்த். மேக்கிங்கில் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செதுக்கியவர், கதை திரைக்கதை இர்ண்டிலும் பயங்கர சொதப்பலை நிகழ்த்தியுள்ளார். நிறைய காட்சிகளில் நம்பகத்தன்மை ஏகத்திற்கும் மிஸ்! ஒரே ஆறுதல் படம் விறுவிறுப்பாக நகர்வது மட்டுமே! மற்றபடி வாவ் பேக்டர் எதுவும் இல்லை

மிஸ்டர் எக்ஸ்- லைட்டா ரிஸ்க்
2.75/5