“ஹிப்ஹாப் ஆதி விஜய் போல” கே.எஸ் ரவிக்குமார்
ஹிப்ஹாப் ஆதி நடித்த நான் சிரித்தால் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ஓரளவு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படக்குழுவினர் படத்தைப் பாராட்டிய பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா ஒன்றை நடத்தினார்கள். விழாவில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசியதாவது,
“சுந்தர்.சி தயாரிப்பில் ‘தலைநகரம்’ படத்தில் நடித்திருக்கிறேன். இது இரண்டாவது படம். ரஜினிகாந்த் பாராட்டியிருக்கிறார் என்று சுந்தர்.சி என்னிடம் ‘கெக்க பெக்க’ குறும்படத்தை பார்க்கச் சொன்னார். பார்த்ததும் எனக்கு என்ன கதாப்பாத்திரம் என்று கேட்டேன். அது இக்குறும்படத்தில் இல்லை. ஆனால், நாங்கள் ‘டில்லி பாபு’ என்ற கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறோம். என்றார். நான் தான் வில்லனா? என்றேன். இல்லை. ஆதி கதாநாயகன், அவருடைய சிரிப்புதான் வில்லன் என்றார். இந்த கதாப்பாத்திரத்தை போல நிஜ வாழ்வில் நான் சிலபேரைப் பார்த்திருக்கிறேன்.
நான் சில காட்சிகளில் சில யோசனைகள் ராணாவிற்கு கூறுவேன். சிலவற்றை கேட்டுக் கொள்வார். சிலவற்றுக்கு அது இந்த இடத்திற்கு பொருந்தாது என்று கூறுவார். ராணா இப்படத்துடன் நிற்காமல் விரைந்து அடுத்தடுத்து படங்கள் இயக்க வேண்டும்.
ஆதியைப் பார்க்கும்போது விஜயைப் பார்ப்பதுபோல இருக்கிறது” என்றார்