படம் செம ஜாலியா இருக்காம்… : வசூலை அள்ளுது ‘நானும் ரௌடி தான்’!

Get real time updates directly on you device, subscribe now.

naanum1

நடிக்கிற படங்கள் மட்டுமில்லாமல் தயாரிக்கின்ற படங்கள் கூட தனுஷுக்கு மிகப்பெரிய வெற்றிகளை குவித்து வருகின்றன.

வேலையில்லா பட்டதாரியைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, நயன் தாரா நடிப்பில் தனுஷ் தயாரித்திருக்கும் நானும் ரெளடி தான் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீசாகியிருக்கிறது.

போடா போடி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் இப்படம் உலகம் முழுவதும் சுமார் 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீசாகியிருக்கிறது.

Related Posts
1 of 67

இதில் குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் சென்னையில் 17 தியேட்டர்கள், வட ஆற்காட்டில் 22 , தென்னாற்காட்டில் 13 , செங்கல்பட்டில் 40 , கோவையில் 27, மதுரையில் 27, சேலத்தில் 22, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஏரியாவில் 12, திருச்சி ஏரியாவில் 25 என சுமார் என சுமார் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீசாகியிருக்கிறது.

படம் ரிலீசான முதல் காட்சியிலேயே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஒரு முழுமையான ஜாலியான எண்டர்டெயினர் என்று படத்தைப் பார்த்த ரசிகர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான பாசிட்டிவ் கருத்துகளை சொல்லி வருகிறார்கள். இதனால் படம் முதல்நாள் காட்சிகளிலேயே தாறுமாறான வசூலை அள்ளத் தொடங்கியிருக்கிறது.

இதனால் இந்த வார ரிலீசில் ‘நானும் ரெளடி தான்’ திரைப்படம் வசூலில் முதலிடத்தில் இருக்கும் என்பது உறுதியாகியிருக்கிறது.

படத்தின் நாயகி நயன்தாராவுக்கு தனி ஒருவன், மாயா என கடந்த சில படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்து வருகின்றன. அந்த ஹிட் செண்டிமெண்ட்டும் நானும் ரவுடி தான் படத்திலும் ஒர்க்-அவுட் ஆகியிருக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள்.