கண்டிஷன்களைப் போட்டு கமலுடன் ஜோடி சேர்ந்த நயன்தாரா!

Get real time updates directly on you device, subscribe now.

பொதுவாக ஒரு படத்தை முடித்த பிறகு தான் சிறிய இடைவெளிக்குப் பிறகு அடுத்த படத்தை ஆரம்பிப்பார் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்.

ஆனால் ரஜினிகாந்த் நடிப்பில், லைகா தயாரிப்பில் அவர் இயக்கிய ‘எந்திரன் 2’ எப்போது வரும் என்று அவருக்கே தெரியாது. அந்தளவுக்கு அந்தப்படம் சர்வதே அளவிலான பெரிய சிக்கல் ஒன்றில் வசமாக மாட்டிக் கொண்டிருக்கிறது.

இதனால் அந்தப்படம் வரும் போது வரட்டும் என்று முடிவு செய்தவர் அடுத்து ‘இந்தியன் 2’ படப்பிடிப்புக்காக வேலைகளில் மும்முரமாக இறங்கி விட்டார்.

இந்தப் படத்தின் முதற்கட்ட வேலைகள் துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. இதில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறாராம்.

கமல்ஹாஸன் பிக் பாஸ் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேலைகளில் கொஞ்சம் பிஸியாக இருப்பதல் அவர் தவிர்த்த காட்சிகளை படமாக்கி வருகிறார் ஷங்கர்.

Related Posts
1 of 70

அதில் ஹீரோயின் சம்பந்தப்பட்ட காட்சிகளும் என்பதால் அவசரம் அவசரமாக நயன்தாராவை கமிட் செய்திருக்கிறார். அதற்கு நயனும் ஒப்புக்கொண்டாலும் படப்பிடிப்புக்கு கிளம்புவதற்கு முன்பாகவே ஏக்கச்சக்க கண்டிஷன்களைப் போட்டிருக்கிறார்.

கால்ஷீட் கொடுத்த நாட்களில் மட்டுமே இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்வேன், கால்ஷீட் கொடுத்த நாட்களையும் தாண்டி ஷூட்டிங் நடந்தால் வேறு வேலை இல்லாமல் இருந்தால் மட்டுமே வருவேன் என்று நிபந்தனை விதித்துள்ளாராம் நயன்.

நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன். முத்தக் காட்சிகளில் நடிப்பது என்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும் ஆகிய கண்டிஷன்களை அடுக்கி இதையெல்லாம் படத்தின் அக்ரிமெண்ட் பிரதியில் சேர்த்து கையெழுத்து போட்டுத் தர வேண்டும் என்று சொல்லி படத்தில் கமிட்டாகியிருக்கிறார் நயன்தாரா.

கமல் படத்தில் முத்தக் காட்சி இல்லாமலா? இருக்கும் என்று சிரிக்கிறார்கள் கோலிவுட்டில்!