வயசான ஹீரோக்களுடன் நடிக்க நயன்தாரா தயார் : ஆனா ஒரு கண்டிஷன்

எப்படி இவருக்கு மட்டும் சம்பளம் ‘கன்னாபின்னா’வென்று ஏறுகிறதென்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள் நயன்தாராவுடன் போட்டி போடும் சக முன்னணி நடிகைகள்.
இன்றைய தேதியில் கோலிவுட், டோலிவுட் இரண்டு மொழிகளிலும் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் நயன்தாரா தான் முதலிடத்தில் இருந்து வருகிறார்.
அவர் நடிக்கின்ற படங்கள் சூப்பர் ஹிட்டாவதால் தமிழில் ‘இருமுகம்’ படத்தில் தனக்கு ஜோடியாக நயனை கமிட் செய்தே ஆக வேண்டும் என்று தவம் கிடந்தார் விக்ரம். அவர் ஆசைப்பட்டது போலவே தயாரிப்பாளர் சுமார் 3 கோடி ரூபாயை சம்பளமாகக் கொடுத்து கமிட் செய்ய படப்பிடிப்பு ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது.
இப்படி தயாரிப்பாளர்களே வம்படியாக தனது சம்பளத்தை கோடிகளில் ஏற்றி விட்டதால் புதிதாக தேடி வருகிற தயாரிப்பாளர்களிடமும் கோடிகளில் சம்பளம் கேட்க ஆரம்பித்து விட்டார் நயன். சிலர் அதற்கு ஒப்புக்கொண்டாலும் பலர் தெறித்து ஓடுவது வேறு கதை.
இப்போது அவரது சம்பளம் 4 கோடியாக உயர்ந்திருக்கிறது. தெலுங்கில் வெங்கடேஷ் ஹீரோவாக நடிக்கும் ‘பாபு பங்காராம்’ படத்தில் நடிக்கத்தான் நயனுக்கு இந்த சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.
முதலில் வயதான ஹீரோ என்றாலே யோசித்து வந்தார் நயன்தாரா, சம்பளம் எகிறியதும் ஓ.கே சொல்லியிருக்கிறார். இப்போது அதை ரூட்டை தனக்கு சாதகமாக்கி வயசான ஹீரோக்களுடன் ஜோடி சேரத் தயார் ஆனா 3 கோடிக்கு மேல் சம்பளம் வேண்டும் என்று புதிதாக கண்டிஷன் போடுகிறாராம்.
இதனால் இன்னும் இரண்டு மூன்று வருடங்களுக்கு நயனின் கால்ஷூட் டைரி ஃபுல்லாகிக் கிடக்கும் என்பது மட்டும் உறுதி.