ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்க மறுப்பு : நித்யாமேனன் கறார்

ஏற்கனவே ”கவர்ச்சி காட்ட மாட்டேன்”, ”சொல்கிற கதை எனக்குப் பிடித்தால் மட்டுமே நடிப்பேன்”, ”ஹீரோ யாரு”ங்கிறது முக்கியம் இப்படி எக்கச்சக்க கண்டிஷன்களைப் போட்டித்தான் படங்களில் நடித்து வருகிறார் நித்யாமேனன்.
இதனாலேயே கைவசம் ஒன்றிரெண்டு படங்களைத் தான் வைத்திருக்கிறார்.
இருந்தாலும் நித்யாவைத் தேடிப்போகிற இயக்குநர்கள் லிஸ்ட் மட்டும் குறைந்தபாடில்லை. முன்னணி நாயகிகள் பலரும் பிஸியாக இருப்பதால் வேறு சாய்ஸ் இல்லாதவர்கள் நித்யாமேனனிடமும் கால்ஷூட் கேட்டுப்போகிற நிலை ஏற்பட்டிருக்கிறது.
அந்த லிஸ்ட்டில் இப்போது பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும் இணைந்திருப்பது தான் ஆச்சரியம்.
ஆமாம், மகேஷ்பாபுவை வைத்து தமிழ், தெலுங்கு இருமொழிப் படம் ஒன்றை இயக்கத் தயாராகி வருகிறார் அல்லவா? அந்தப்படத்தில் நடிக்க நித்யா மேனனை கேட்டுப் பார்த்திருக்கிறார்.
படத்தில் இரண்டு நாயகிகள் என்றாலும் சம்மதம் சொல்லத் தயாராகத்தான் இருந்தார் நித்யா. ஆனால் இன்னொரு நாயகியின் கேரக்டரை விட தனக்கு சொல்லப்பட்ட கேரக்டரில் எந்த முக்கியத்துவமும் இல்லாததால் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம். வேண்டுமானால் அந்த கேரக்டரில் நான் நடிக்கிறேன். தர்றீங்களா..? என்று கறார் காட்டுகிறாராம் நித்யாமேனன்.
அந்த கேரக்டருக்கு மும்பை வரவு பரிணிதியை கமிட் செய்து விட்ட ஏ.ஆர்.முருகதாஸ் நித்யாமேனன் சொன்ன அந்த டம்மி கேரக்டருக்கு மட்டும் நாயகியை தேடுவதில் ரொம்பவே சிரமப்பட்டு வருகிறார்.
யாராவது மனசு வையுங்கம்மா…