நம்புங்க நான் ஒரு நடிகை : நண்பர்களிடம் சுரபி பட்ட பாடு!

Get real time updates directly on you device, subscribe now.

surabhi1

விக்ரம் பிரபு ஜோடியாக ‘இவன் வேற மாதிரி’ படத்தில் அறிமுகமானவர் சுரபி.

தொடர்ந்து தனுஷுடன் ‘வேலையில்லா பட்டதாரி’யில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்தார். ஆள் பார்ப்பதற்கு லட்சணமாகவும் நல்ல கொழுக் மொழுக்காகவும் இருப்பதால் அப்படியே ஆந்திரா பக்கம் அம்மணியை அள்ளிக்கொண்டு போனார்கள்.

இப்போது தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் நடித்து வரும் சுரபிக்கு தமிழில் ஜெய்யுடன் ‘புகழ்’ படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. தெலுங்கில் கடந்த 14 ஆம் தேதி சங்கராந்திக்கு ரிலீசான ‘எக்ஸ்பிரஸ் ராஜா’ படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த சந்தோஷ தருணத்தில் தன்னைப் பற்றி ஒரு ரகசியத்தை வெளியிட்டிருக்கிறார் சுரபி.

Related Posts
1 of 2,259

டெல்லியில் ஏதோ ஒரு குக்கிராமத்தில் இருந்து வந்தவர் போலிருக்கிறது அவருடைய அந்த ஸ்டேட்மெண்ட்.

அதாவது சுரபி தமிழ், தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடிக்கிற விஷயம் இதுவரை அவரது உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ தெரியவே தெரியாதாம்.

ஒருநாள் இண்டர்நெட்டில் தான் நடித்த படங்களின் புகைப்படங்களை அவர்களுக்கு காட்டிய போது நம்பாமல் அதிர்ச்சியோடு பார்த்தார்களாம்.

முதலில் அது நீ இல்லை என்று சொன்னாலும் பிறகு முழு சமாச்சாரங்களையும் படித்த பிறகு நம்பினார்களாம்.

இந்த விஷயத்தை நீங்க நம்புறீங்களா..?