கஷ்டம்னா காசு கொடுக்கலாம், படம் தயாரிக்க முடியுமா? : அப்படிப்போடு நயன்தாரா!

சிம்பு, பிரபுதேவா ஆகியோர்கள் உடனான காதல்களை விட விக்னேஷ் சிவனுடனான காதல் நயனுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் தான் போய்க் கொண்டிருந்தது.
‘நானும் ரவுடி தான்’ படப்பிடிப்பு ஆரம்பித்த போது அரும்பிய அந்தக் காதல் கிளைமாக்ஸில் விவகாரம் தனுஷ் காதுகளை எட்டவும் பிரச்சனை ஆரம்பமானது.
நான் பணம் போட்டது படமெடுக்கவா நீங்க காதலிக்கவா என்று தனுஷ் டென்ஷனாக, இறுதி இரண்டு நாட்கள் படப்பிடிப்பு பஞ்சாயத்துக்கு சென்று தான் முடிந்தது.
படமும் ஹிட்டானதால் விக்னேஷ் சிவனுக்கு அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார்.
இப்போது முந்தைய படத்தில் ஏற்பட்ட பிரச்சனை புதுப்படத்தில் வந்து விடக்கூடாது என்று யோசித்த நயன் அவரே விக்னேஷ் சிவனுக்காக படம் தயாரிக்கப் போகிறார் என்று செய்தி பரவியது.
அடடே… நயனுக்கு நல்ல மனசு என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டு வாய் மூடுவதற்குள் அந்தச் செய்தியை பொய்யாக்கியிருக்கிறார் நயன்.
ஆமாம் தன் காதலருக்காக படமெல்லாம் தயாரிக்கவில்லையாம். கஷ்டம்னா காசு கொடுக்கலாம், அதுக்காக படமெல்லாம் தயாரிக்க முடியுமா என்ன? என்று சொல்லும் நயன் விக்னேஷ் சிவனுக்காக ஒரு நல்ல வ்சதியான தயாரிப்பாளரை வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறாராம்.
நயன் கேட்டால் மறுப்பு சொல்வாங்களா என்ன?