இளையராஜா இசையமைத்துள்ள ஆங்கிலத்திரைப்படம்!

Get real time updates directly on you device, subscribe now.

இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ திரைப்படத்தின் ‘கம் ஃப்ரீ மீ’பாடல் உலக இசை தினமான ஜூன் 21 2022 அன்று வெளியிடப்பட்டது.’எ பியூட்டிஃபுல் பிரேக்அப்’ ஒரு ரொமாண்டிக் த்ரில்லர் ஆங்கிலத் திரைப்படமாகும். அஜித்வாசன் உக்கினா எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் க்ரிஷ் முத்ரகடா மற்றும் மேட்டில்டா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் பல முக்கியமான திரைக்கலைஞர்களும், தொழிற்நுட்ப வல்லுநர்களும் இப்படத்தின் உருவாக்கத்தில் பெரும்பங்காற்றி இருக்கிறார்கள்.

Related Posts
1 of 5

இப்படத்திற்கான இசைஞானி இளையராஜாவின் பங்கு, படத்தின் பிம்பத்தை பெரிய அளவில் உயர்த்துகிறது. உலகெங்கிலும் பலகோடி ரசிகர்களைக் கொண்ட ஒரு இசைமேதை இப்படத்திற்காக தனது சிறந்த இசையை வழங்கியுள்ளது பெருமைக்குரியதாகும். இசைஞானி வெகுநாட்களுக்குப் பிறகு ஒரு திகில் படத்திற்குள் தன்னை இணைத்துக் கொள்ளும் திரைப்படம் இதுவாகும். இப்படத்திற்கான பின்னணி இசை, அவரின் பரந்த இசை ஞானத்திலிருந்து மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படத்திற்காக BOW TIE Symphony Orchestra -ல் மாயாஜாலமான அசல் ஒலிப்பதிவுகளை இளையராஜா உருவாக்கியுள்ளார்.