விஜய் – அஜித் – பிரசாந்த் : ஐஸ்வர்யா ராய் யாருக்கு..?
‘மம்பட்டியான்’ படத்துக்குப் பிறகு நெறையவே இடைவெளி விட்டு விட்டார் பிரசாந்த்.
எல்லாம் பெரிதாக ‘சாஹசம்’ செய்யத்தான் இந்த இடைவெளி என்பது இன்று அவரின் ‘சாஹசம்’ படத்தின் ஆடியோ பங்ஷனை பார்த்ததும் உணர முடிந்தது.
பாத்ரூம் போனாலும் பவுன்சர் படையோடு போகும் ஹீரோக்களைப் போல் இல்லாமல் தனது ரசிகர்கள் புடை சூழ, அவர்களின் விசில், கைத்தட்டல்கள் காதுகளை கிழிக்க கலந்து கொண்டார்.
திரையிடப்பட்ட அத்தனை பாடல்களும் அப்படி ஒரு ப்ரெஷ்னஸ். பிரசாந்த்தும் அதே அழகு குறையாமல் இருந்தது தான் ஆச்சரியம்.
நிகழ்ச்சியில் பிரசாந்த்தை வைத்து சாக்லேட் படத்தை இயக்கிய இயக்குநர் மாதேஷும் கலந்து கொண்டார்.
மைக்கைப் பிடித்ததும் அப்போதே பிரசாந்த்துக்கு இருந்த க்ரேசுக்கு ஒரு சாம்பிளை எடுத்து விட்டார்.
நான் ஷங்கர் சாரிடம் வேலை செய்த போது ஜூன்ஸ் படத்துக்கு ஹீரோ தேடிக் கொண்டிருந்தோம். அப்போது படத்தில் ஹீரோயினாக ஐஸ்வர்யாராயை கமிட் செய்து விட்ட்டோம். அவர் உலக அழகி. அவருக்கு யாரை ஜோடியாகப் போடலாம் என்று யோசித்த போது அஜித், விஜய், பிரசந்த் என மூன்று ஹீரோக்களை தேர்வு செய்து வைத்திருந்தோம்.
இதில் ஷங்கர் சார் யாரை தேர்வு செய்யப் போகிறார் என்று நான் உட்பல எல்லா உதவி இயக்குநர்களும் ஆவலோடு காத்திருந்தார்கள். இறுதியில் பிரசாந்த் தான் ஜெயித்தார்.
ஏன் இவ்வளவு பெரிய கேப் விடுகிறார் என்று பிரசாந்த் மீது வருத்தம் இருந்தது. இருபது அடி பாய்ந்து கொண்டிருந்தவர் நாற்பது அடி பாயப்போகிறார் என்று இப்போது தான் புரிகிறது.
என்றவாறு அமர்ந்தார் மாதேஷ்.