நயன்தாராவுக்காக விக்ரம் வெயிட்டிங்! – அது அப்போ; சிவகார்த்திகேயனுக்காக நயன்தாரா வெயிட்டிங்! – இது இப்போ
நல்ல கதை கிடைத்தால் கூட அதை தூக்கி ஓரமாக வையுங்கள், முதலில் நயன்தாராவின் கால்ஷூட்டை வாங்கி வாருங்கள் அப்புறம் நாம் கதையைப் பற்றிப் பேசிக்கொள்ளலாம் என்று தங்களை தேடி வரும் இயக்குநர்களுக்கு செக் வைக்கிறார்கள் முன்னணி ஹீரோக்கள்.
”அவர் கூட யார் நடிப்பா…” என்று கிண்டல் செய்த விக்ரமே தன்னுடைய ”இருமுகம்” படத்தில் நயனை ஜோடியாக்கினால் தான் வருவேன் என்று அடம்பிடித்த சம்பமும் சமீபத்தில் நடந்தேறியிருக்கிறது. அதற்காக தயாரிப்பாளர் 3 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து அழுத கதையெல்லாம் தனி.
”மாயா” படத்துக்குப் பிறகு நயன்தாரா நடிக்கும் எல்லா படங்களும் அடுத்தடுத்து ஹிட்டாகி வருகிறது. அந்த செண்டிமெண்ட்டுக்கு தான் ஹீரோக்கள் மத்தியில் இத்தனை கிராக்கி. அந்தளவுக்கு மாஸ் ஹீரோக்களில் இருந்து ஜூஸ் பிழிகிற ஹீரோக்கள் வரை எல்லோரும் நயனின் கால்ஷூட்டுக்காக காத்திருக்கிறார்கள்.
நிலைமை இப்படியிருக்க நயனோ சிவகார்த்திகேயனின் க்ரீன் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருக்கிறாராம்!
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் அதுதான் உண்மை.
தனது காதலரும்(?), இயக்குநருமான விக்னேஷ் சிவன் அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க ஆசைப்பட்டதால் அதில் ஹீரோயினாக நடிக்கக் கேட்டதும் எந்த கேள்வியும் கேட்காமல் கால்ஷுட் தர சம்மதித்து விட்டார் நயன்.
ஆனால் சிவகார்த்திகேயன் தான் தனது சொந்தப்படமாக ‘ரெமோ’ படத்தில் பிஸியாக இருக்கிறார். பெரும் முதலீட்டில் எடுக்கப்பட்டு வரும் படமென்பதால் முழுக்கவனத்தையும் அதில் மட்டுமே வைத்திருக்கிறார். அந்தப் படப்பிடிப்புக்கு பூசணிக்காய் உடைத்த பிறகு தான் புதுப்படத்தை கமிட் செய்வது என்கிற திடமான முடிவிலும் இருக்கிறார்.
இதனால் விக்னேஷ் சிவன் படம் தள்ளிப்போகும் சூழல் ஏற்பட ”பரவாயில்லை படம் எப்போது ஆரம்பித்தாலும் நானே கால்ஷூட் தருகிறேன். அதுவரை படத்தின் ஆரம்பகட்ட வேலைகளைப் பார்” என்று காதலர் விக்னேஷ்சிவனுக்கு அன்புக்கட்டளை போட்டிருக்கிறாராம் நயன்.
காதலின்னு அமைஞ்சா இப்படியல்லவா அமையணும்!