அப்போ ஓடி ஒளிஞ்சாங்க; இப்போ தேடி வர்றாங்க : இறங்கி அடிக்கும் சிவகார்த்திகேயன்!

Get real time updates directly on you device, subscribe now.

siva

சொந்தப் படமான ‘ரெமோ’ படப்பிடிப்பில் இருந்த சிவகார்த்திகேயன் அந்தப் படத்தை ஆரம்பித்த போது வேறு எந்த புதுப்படத்தையும் கமிட் செய்யாமல் இருந்தார்.

முதல் சொந்தப்படம் என்பதால் டென்ஷன் அதிகமிருக்குமே? அதனால் எடுத்த ‘முன் ஜாக்கிரதை’ முடிவு தான் அது.

ஆனால் இப்போது தொடர்ந்து தனது பேனரிலேயே அடுத்தடுத்த படங்களை தயாரிப்பதில் மும்முரமாகி விட்டதால் புதுப்படங்களை கமிட் செய்ய தொடங்கி விட்டார்.

அந்த வகையில் ‘ரெமோ’வைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் புதுப்படத்தை ‘தனி ஒருவன்’ இயக்குநர் மோகன்ராஜா இயக்குகிறார்.

சிவகார்த்திகேயன் நடிக்க வந்ததிலிருந்து அவருக்கு ஜோடி கிடைப்பது மான் கொம்பு தான்.

Related Posts
1 of 66

‘மான் கராத்தே’ படத்தில் அவருக்கு ஹன்ஷிகா ஜோடியான போது பலரும் சிவகார்த்திகேயனுக்கு ஹன்ஷிகா ஜோடியா? என்று கேலி செய்த சம்பவமெல்லாம் நடந்ததுண்டு.

இப்படி ஊரார் வாய்க்கு சிவகார்த்திகேயன் ”அவல் பொறி”யாக இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நிலையான இடம் அப்படியே தான் இருக்கிறது என்பதைக் காட்டும் படமாக அமைந்து விட்டது ‘ரஜினி முருகன்’.

பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு ரிலீசான ‘ரஜினி முருகன்’ படம் மிகப்பெரிய வசூலோடு மெகா ஹிட் படமாக அமைந்து விட்டதால் முன்னணி நடிகைகளின் பார்வையும் சிவகார்த்திகேயன் மேல் பட ஆரம்பித்து விட்டது.

அதில் முந்திக்கொண்டு கால்ஷூட் கொடுத்திருக்கிறார் நயன்தாரா. ஆமாம், மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நயன்தாரா தான் அவருக்கு ஜோடியாம். ஹீரோ – இயக்குநர் இருவருமே லேட்டஸ்ட் மெகா ஹிட் படங்களை கொடுத்தவர்கள் என்பதால் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை நயன்.

நயன்தாராவே சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர வந்ததைக் கேள்விப்பட்ட முன்னணி நடிகைகள் பலரும் இப்போது தாங்களும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் ஆவலில் அவருக்கு நெருக்கமானவர்கள் மூலம் தூது விட ஆரம்பித்திருக்கிறார்கள்.

அப்புறம் என்ன இறங்கி அடிங்க ப்ரோ…