விஜய்சேதுபதியின் ‘றெக்க’ : செம மாஸா ஒரு ஆல் கிளாஸ் படம்!

‘நானும் ரவுடி தான்’ படத்துக்குப் பிறகு மீண்டும் பிஸியாக ஆரம்பித்திருக்கிறார் விஜய் சேதுபதி.
ஆனால் இந்த முறை கமிட் செய்கிற படங்களெல்லாமே தனது கேரியருக்கு பில்லராக இருக்கக்கூடிய படமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்.
அப்படிப்பட்ட கதைகளாகக் கேட்டுத்தான் கால்ஷூட் கொடுக்கிறார்.
அப்படி அவர் கதையைக் கேட்டு இம்ப்ரஸ் ஆகி கமிட் செய்திருக்கும் படம் தான் ‘றெக்க’.
இவர் விரைவில் ரிலீசாகவுள்ள ‘டீல்’ படத்தின் இயக்குநர் ரத்தின சிவா இப்படத்தை இயக்குகிறார்.
விஜய்சேதுபதி நடித்த ‘ஆரஞ்சு மிட்டாய்’ படப் புகழ் பி.கணேஷ் தனது காமன்மேன் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.
டி.இமான் இசையமைக்க , எம்.சி. கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார் படதொகுப்பு பிரவின் K.L , கலை மோகன மகேந்திரன் , சண்டை காட்சிகளை ராஜசேகர் கவனிக்க மிகப் பிரம்மாண்டமாக உருவாகிறது ’றெக்க’.
இப்படம் விஜய்சேதுபதி நடித்த படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு காதல் கலந்த மாஸ் எண்டர்டெயிணராகவும், ஆல் கிளாஸ் ஆடியன்ஸ் படமாகவும் இருக்கும் என்கிறார் இயக்குநர் ரத்தின சிவா.
தற்போது விஜய் சேதுபதி நடித்து கொண்டிருக்கும் தர்மதுரை, ஆண்டவன் கட்டளை படங்களை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.