பிரபலங்களால் நிறைந்த நெஞ்சுக்கு நீதி இசை விழா!

Get real time updates directly on you device, subscribe now.

தயாரிப்பாளர் போனி கபூர் வழங்கும், ZEE STUDIOS & BAYVIEW PROJECTS உடன் ROMEO PICTURES இணைந்து தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”. சமூக அவலத்தை சாடும் ஒரு அழுத்தமான திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெயலர் வெளியீட்டு விழா இன்று திரைபிரபலங்கள்,படக்குழுவினர் கலந்து கொள்ள கோலகலமாக நடைபெற்றது.

இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆரி, தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், மயில்சாமி, அப்துல் லீ, ராட்சசன் சரவணன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதையை அனுபவ் சின்ஹா, எழுதியுள்ளார். ஒளிப்பதிவு தினேஷ் கிருஷ்ணன். B செய்துள்ளார். இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார், எடிட்டிங் ரூபன், கலை இயக்கம் வினோத் ராஜ்குமார் மற்றும் லால்குடி N இளையராஜா, ஸ்டன்னர் சாம் ஸ்டண்ட், C H பாலு ஸ்டில்ஸ், பாடல்கள் யுகபாரதி, அருண்ராஜா காமராஜ் மற்றும் தமிழரசன் பச்சமுத்து வசனம் எழுதியுள்ளனர், லீலாவதி நடன இயக்குனர் , அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளர், ஒலி வடிவமைப்பு சுரேன் மற்றும் அழகியகூத்தன், VFX ஹரிஹர சுதன் (Lorven Studio) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

தயாரிப்பு நிர்வாகி S.P. சொக்கலிங்கம், காஸ்ட்யூமர் K.செல்வம், ஹேர் மற்றும் மேக்கப் சக்திவேல், விளம்பர வடிவமைப்புகள் கோபி பிரசன்னா ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.