துருவ் விக்ரமைத் தொடர்ந்து விக்ரம் குடும்பத்திலிருந்து வரும் இன்னொரு கதாநாயகன்!

தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தை தமிழில் வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்து இயக்கி வருகிறார் இயக்குநர் பாலா.
இப்படத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகிறார். விக்ரமுக்கு ‘சேது’ படம் மூலம் தமிழ்சினிமாவில் வெற்றிப்பாதையை அமைத்துக் கொடுத்த பாலாவின் இயக்கத்திலேயே அவருடைய மகனும் அறிமுகமாவதால் அப்படத்துக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
விக்ரம் மகனைத் தொடர்ந்து அவரது குடும்பத்திலிருந்து மேலும் ஒரு புதிய இளம் கதாநாயகன் அறிமுகமாக உள்ளார்.
நடிகர் விக்ரம் சகோதரியின் மகனான அர்ஜுமன் தான் அந்த இளம் ஹீரோ. இவர் விரைவில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
சினிமா பள்ளியில் நடிப்பு கலையை முறையே பயின்றுள்ள இவருக்கு சிறு வயது முதலே நடிப்பின் மேல் உள்ள ஈர்ப்பால் கதாநாயகனாக வேண்டும் என்ற ஆசையில், குடும்பத்தினரின் ஆசீர்வாதத்தோடு திரையுலகில் அறிமுகமாகிறார் அர்ஜுமன்.