எடுத்த வரைக்கும் திருப்தியில்லை : ரீ-ஷூட் போகிறார் ‘கபாலி’

Get real time updates directly on you device, subscribe now.

Kabali

ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் இரண்டு வருடங்கள் இடைவெளி விடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஒரே நேரத்தில் ‘கபாலி’, ‘2.0’ ( டூ பாயிண்ட் ஓ ) என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இதில் முதலில் ஆரம்பிக்கப்பட்ட ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்புகள் 90 சதவீதம் முடிந்து விட்ட நிலையில் ‘2.0’ படத்தில் நடிக்கப் போய் விட்டார் ரஜினி.

‘கபாலி’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் மலேசியாவில் நடைபெற்றது. ரசிகர்களின் அன்புத் தொல்லையையும் மீறி ஒருவழியாக படப்பிடிப்பை நடத்தி விட்டு மீதியை சென்னையில் நடத்தினார்கள்.

Related Posts
1 of 74

இந்த நிலையில் ‘கபாலி’ டீம் மீண்டும் படப்பிடிப்புக்காக மலேசியா செல்ல முடிவு செய்துள்ளது. இதில் மலேசிய வில்லன் நடிகர்களுடன் ரஜினிகாந்த் மோதும் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.

அதோடு அங்கு படமாக்கப்பட்ட காட்சிகள் ரசிகர்களின் தொந்தரவால் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக வரவில்லையாம். இதனால் அந்த காட்சிகளை  எல்லாம் மீண்டும் ரீ-ஷூட் செய்ய முடிவு செய்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.

அது முடியவும் ‘2.0’ படத்துக்காக அமெரிக்க செல்கிறார் ரஜினி.

வரும் மே மாதம் ‘கபாலி’ படத்தை ஸம்மர் ஸ்பெஷலாக ரசிகர்களுக்கு விருந்து படைக்க இருக்கிறார்கள்.