ஒன்ஸ்மோர்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

 

பழங்காலத்து கதையை விஜய் பட டைட்டிலை வைத்து ஒப்பேற்றியுள்ளனர்

போ போ என்று விரட்டும் ஹீரோ அர்ஜுன் தாஸை வா வா என்று துரத்துகிறார் ஹீரோயின் அதிதி சங்கர். பழைய காதலால் துவண்டுள்ள அர்ஜுன் தாஸ் அதிலிருந்து மீண்டு அதீதியை கரம் பிடிக்கும் போது அவரது பாஸ்ட் லவ்வர் அழைக்கிறார்..அடுத்து என்ன நடந்தது என்பது மீதிக்கதை

மிகவும் மந்தமான மாடுலேசன்லே பேசும் அர்ஜுன் தாஸ் படமெங்கும் எனர்ஜியின்றியே இருக்கிறார்..துருதுரு அதீதி சங்கர் மிகையான நடிப்பால் நம்மைச் சோதிக்கிறார். இன்னொரு நாயகி ஒகே ரகம். ஏனைய கேரக்டர்களில் யாரும் பெரியாக கவனம் ஈர்க்கவில்லை

இசையமைப்பாளர் மட்டும் படத்திற்கு ஜீவனை கொடுத்துள்ளார். பாடல்கள் பின்னணி இசை இரண்டுமே டாப்! ஒளிப்பதிவாளர் இயல்பான மேக்கிங்-ஐ சாத்தியப்படுத்தியுள்ளார்.

படத்தில் எந்தக் கேரக்டரும் நம்மோடு கனெக்ட் ஆகவேயில்லை. மிகவும் பலவீனமான ரைட்டிங்கே அதற்கான காரணம். கிரிஜ்ச் சம்பவங்கள் மிகுதியாக இருப்பதால் ஒன்ஸ்மோர் நம்மை கவரவில்லை
2.5/5