‘பச்சோந்தி’யால் இயக்குனர் அவதாரமெடுத்த நடிகர் சம்பத் ராஜ்!

Get real time updates directly on you device, subscribe now.

முத்திரக்கனி இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் 2004 இல் வெளிவந்த ‘நெறஞ்ச மனசு’ படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கியர் நடிகர் சம்பத் ராஜ்.

தொடர்ந்து ‘பருத்தி வீரன்’, ‘தாமிரபரணி’, ‘சென்னை 600028’ , ‘சரோஜா’, ‘ஜில்லா’ போன்ற 80 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அப்படி பிஸியாக இருந்தவரை கடந்த சில வருடங்களாக தமிழ்ப்படங்களில் பார்க்க முடியவில்லை. ஏனென்றால் அவர் பிற மொழிப் படங்களில் பிசியாக இருந்தார்.

தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவர இருக்கும் ‘காலா’ திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அவர் தொடர்ந்து சக்க போடு போடு ராஜா மற்றும் வெங்கட் பிரபு தயாரிப்பில் இயக்குனர் சரவணராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர் கே நகர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இப்படி பல்வேறு படங்கள் மற்றும் வித்யாசமான வேடங்களில் நடித்து வந்த சம்பத் ராஜா தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.

‘பச்சோந்தி’ என்ற பெயரில் குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளவர் இந்த குறும்படத்தில் சமூகத்தில் நடக்கும் ஆண் ஆதிக்கம் பற்றி எடுத்துச் சொல்லியிருக்கிறாராம். இந்த குறும்படத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால் பெண்மை பேசும் ஆண் ஆதிக்கம் என்றே கூறலாம். பெண்களை காட்சிப்பொருளாகவும், காமத்துக்கு கைக்குழந்தையாகவும் நினைக்கும் ஆண்களை பற்றி மிகச் சுருக்கமாக படமாக்கியிருக்கிறாராம் இயக்குனர் ஆன நடிகர் சம்பத்.