‘பக்கா’வான தோனி ரசிகராக மாறிய விக்ரம் பிரபு!

Get real time updates directly on you device, subscribe now.

vikram-prabhu

‘நெருப்புடா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விக்ரம் பிரபு – நிக்கி கல்ராணி ஜோடி சேர்ந்திருக்கும் புதிய படம் தான் பக்கா.

அதிபர்’ படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவனம் சார்பில் டி.சிவகுமார் மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் இப்படத்தில் இன்னொரு நாயகியாக பிந்து மாதவியும் நடிக்கிறார். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துக்காளை, சிசர்மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் டி.சிவகுமார் நடிக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குகிறார் எஸ்.எஸ்.சூர்யா

Related Posts
1 of 153

படம் பற்றி விக்ரம்பிரபுவிடம் கேட்டபோது… ”திரு விழாக்களில் பொம்மை கடை நடத்தும் டோனிகுமார் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் .
கிரிக்கெட் ரசிகரான நான் டோனி பெயரில் ரசிகர் மன்றம் நடத்தும் அளவுக்கு கிரிக்கெட் வெறியன். ரஜினி காந்த் பெயரில் ரசிகர் மன்றம் நடத்தும் ரஜினி வெறியர் ரஜினி ராதா ( நிக்கி கல்ராணி) கிராமத்து பெரிய மனிதர் மகள் நதியா(பிந்து மாதவி) இப்படி மூன்று பேருக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் கலகலப்பான பக்கா படம். நம்மால் மறக்கப் பட்டு வரும் கிராமத்து வாழ்க்கையை பதிவு செய்யும் படமாக பக்கா இருக்கும்.

இதுவரை நான் ஏற்காத யதார்த்தமான கதாபாத்திரம் எனக்கு புதிய பரினாமத்தை வெளிக் கொண்டு வரும் படமாக அமையும். கமர்ஷியல் காமெடி கலாட்டா படமாக இது இருக்கும் என்றார்.

படப்பிடிப்பு முழுவதும் சென்னை, பாண்டி, குற்றாலம், ஹைதராபாத் போன்ற இடங்களில் நடை பெற்றிருக்கிறது.

நாங்கள் தயாரித்த அதிபர் படம் நல்ல படம் என்ற பெயரை பெற்றுத் தந்தது. பக்கா படம் நல்ல கமர்ஷியல் வெற்றிப் படமாக வரும் என்று உறுதியாக நம்புகிறேன்.
இந்தப் படத்தில் நான் ஒரு நல்ல வேடத்திலும் நடித்திருக்கிறேன். இந்த படத்தை தொடந்து ‘தர்மன்’ என்ற படத்தையும் தயாரிக்க உள்ளோம்.
நடிகர் நடிகை மற்றும் கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிக்கிறோம் என்றார் தயாரிப்பாளர் டி.சிவகுமார்.