‘மீ டூ’ பணக்காரங்க வீட்டுப் பிரச்சனை – போட்டுத் தாக்கிய கரு.பழனியப்பன்

Get real time updates directly on you device, subscribe now.

கோடம்பாக்கத்தின் தூக்கத்தை தொலைக்க வைத்திருக்கும் சின்மயி ஆரம்பித்து வைத்த ‘மீ டூ’ பிரச்சனையைப் பற்றி தனக்கே உரிய பாணியில் போட்டுத் தாக்கினார் இயக்குனர் கரு.பழனியப்பன்.

ஏ.வசந்தகுமார் இயக்கத்தில் தயாராகியிருக்கும் ‘ராஜாவுக்கு ராஜா’ படத்தின் படத்தின் டீஸரை இயக்குநர் தியாகராஜன் வெளியிட இயக்குநர்கள் ஏ.வெங்கேஷ், கரு.பழனியப்பன் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் கரு.பழனியப்பன் பேசியதாவது, “இந்த விழாவுக்கு என்னை நடிகை சோனா தான் அழைத்தார். அவர் 4 ஆண்டுகளுக்கு பின் இதற்காகப் போன் செய்தார். இவ்விழாவுக்கு அழைத்தார். படத்தின் இயக்குநர் எப்படியாவது கரு.பழனியப்பனை அழைத்து வர வேண்டும் என்று கூறினார் என்றார்.

Related Posts
1 of 2

இப்போதெல்லாம் பிரச்சினைகளை ஆடியோ விழாவில் தான் பேசவேண்டியுள்ளது. இன்று ‘மீ டூ’ பற்றிப் பேசுகிறார்கள். இவர்கள 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை பற்றிப்  பேசுவதுண்டா? ராஜலட்சுமிக்கு நேர்ந்த அந்தக் கொடுமை பற்றிப் பேசுவதுண்டா? ‘மீ டூ’ என்பது இரண்டு பணக்காரர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. அதை அவர்களே பேசித் தீர்த்துக் கொள்வார்கள்.

மீடியாக்கள் இவ்வளவு ‘மீ டூ’ பற்றிப் பேசுகிறார்கள். எந்த மீடியாவாவது ஒடுக்கப்பட்டவர்களுக்கு , எளிய மக்களுக்கு நடக்கும் கொடுமை பற்றிப் பேசுவதுண்டா? அதை சாதாரணமாக கடந்து போகும் ஒன்றாகத்தான் பார்க்கிறார்கள்.” இவ்வாறு கரு.பழனியப்பன் பேசினார்.