பராசக்தி- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

தமிழக அரசியல் வரலாற்றில் பெரு நெருப்பை பற்ற வைத்தப் போராட்டம் இந்தி எதிர்ப்பு போராட்டம். அதை கருவாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளனர்

தீவிர இந்தி எதிர்ப்பு போராளியான சிவகார்த்திகேயன் தன் நண்பனின் மரணத்தால் பாதிக்கப்பட்டு ரெயில்வேயில் வேலைக்குச் சென்று விடுகிறார். அவரால் சின்னதாக பாதிக்கப்பட்ட ரவிமோகன் சிவகார்த்திகேயனை பலிவாங்க நினைக்கிறார். வருடம் 1958-லிருந்து 1963-க்கு வருகிறது. சிவகார்த்திகேயனின் தம்பியான அதர்வா இந்தி திணிப்பை எதிர்த்துப் போராடுகிறார். சிவகார்த்திகேயன் கண்டிக்கிறார். அதன்பின் சிவகார்த்திகேயனே களம் காண வேண்டிய சூழல் வர.. அடுத்து என்ன என்பதே மீதித் திரைக்கதை

Related Posts
1 of 2

சிவகார்த்திகேயன் புரட்சிகரமான காட்சிகளில் ஒகே வாங்குகிறார். காதல் காட்சிகளில் ரொம்பவே சோதிக்கிறார். ரவிமோகனின் வில்லத்தனம் நன்றாக எடுபடுகிறது. ஸ்ரீலீலா சிறப்பாக நடித்துள்ளார். .அதர்வாவை இன்னும் நன்றாக யூஸ் பண்ணியிருக்கலாம். பாவம். ஏனைய கேரக்டர்கள் எல்லாம் ஒகே

இசையில் பிரதமாதப்படுத்தியுள்ளார் ஜிவி பிரகாஷ். பாடல்களிலும் வைப் குறையவேயில்லை. ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு தரமாக அமைந்துள்ளது. கலை இயக்கமும் பராசக்தியின் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது

மிகவும் உணர்ச்சி மிகுந்த போராட்டத்தை திரைப்படமாக மாற்றுவதில் ரொம்பவே குழம்பியுள்ளது சுதா கொங்கராவின் எழுத்துக் கூட்டணி. இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக பிறமொழி ஆட்களும் பங்கு கொண்டார்கள் என்பது ஏற்பதாக இல்லை. மேலும் மேம்போக்கான திரைக்கதை படத்தை அவ்வப்போது டல் படுத்துகிறது. காதல் காட்சிகளில் நீண்ட கத்திரியைப் போட்டிருக்க வேண்டும். ஓகோவென வந்திருக்க வேண்டிய படம். ஒகேவாக வந்திருக்கிறது
2.75/5