முதல்முறையாக பெண் வேடமிட்டு நடிக்கும் விஜய் சேதுபதி

Get real time updates directly on you device, subscribe now.

vijay-sethupathi

மிழ்சினிமாவில் இன்றளவுக்கும் பேசப்படக்கூடிய படங்களில் ஒன்று ஆரண்ய காண்டம்.

Related Posts
1 of 159

அந்த திரைப்படத்தை இயக்கிய தியாகராஜன் குமார்ராஜா இயக்கும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய படத்துக்கு ‘சூப்பர் டீலக்ஸ்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதில் விஜய் சேதுபதி பெண் வேடமிட்டுள்ளார். ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியுடன் மலையாள நடிகர் ஃபகத் பாசில், சமந்தா மற்றும் காயத்ரி ஆகியோர் நடிக்கின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் தொடர்ந்து நடித்து வரும் விஜய் சேதுபதி முதல்முறையாக பெண் வேடத்தில் நடித்திருப்பதால் இப்போதே ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.